நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட் இந்த திரைப்படத்தில் விஜய் பூஜா ஹெக்டே ஆகியோர்கள் நடித்துள்ளார்கள் மேலும் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. மேலும் அனிருத் இசையில் படத்தின் பாடல்கள் உருவாகியுள்ளது.
இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு அரபி குத்து பாடலை பீஸ்ட் படத்திலிருந்து ரிலீஸ் செய்தார்கள் இந்த பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வைரல் ஆனது. இன்று சமூக வலைத்தளத்தை திறந்தாலே அரபி குத்துப்பாடலுக்கு நடனமாடிய வீடியோ தான் அதிகமாக இருக்கிறது.
இந்த பாடலை சிவகார்த்திகேயன் எழுதி அனிருத் இசையமைத்திருந்தார். பாடலுக்கு சினிமா பிரபலங்கள் யாஷிகா ஆனந்த், ராஷ்மிகா மந்தனா, பூஜை ஹெக்டே என பலரும் நடனமாடி ரீல் வீடியோவை வெளியிட்டார் அந்த வகையில் 2002ஆம் ஆண்டு 5 ஸ்டார் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் கனிகா இவரும் அரபி குத்து பாடலுக்கு நடனமாடி வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இவர் தமிழ் திரைப்படத்தை தொடர்ந்து கன்னடம், தெலுங்கு, மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் இவர் மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார் அதுமட்டுமில்லாமல் குரல், கோப்ரா ஆகிய திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
அதுமட்டுமில்லாமல் 2006 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியாகிய வரலாறு திரைப் படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமாவில் மட்டுமல்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் இவர் பங்கேற்றுள்ளார் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் இவர் பங்கேற்றுள்ளார்.
இதோ அவர் ஆடிய நடன வீடியோ.