கங்குவா படத்திற்காக ரிஸ்க் எடுக்கும் “சூர்யா”.. கோடி கணக்கில் சம்பளத்தை கொடுக்கும் தயாரிப்பாளர்..!

Surya : நடிகர் சிவகுமாரின் மகனான நடிகர் சூர்யா திரை உலகில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். கடைசியாக இவர் நடித்த எதற்கும் துணிந்தவன், விக்ரம் போன்ற படங்கள் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்து  நடித்து வரும் படம் “கங்குவா”.

படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். ஸ்டுடியோ கிரீன், யு வி கிரியேஷன் கங்குவா படத்தை மிகப் பிரமாண்ட பொருள்ச அளவில் தயாரித்து வருகிறது. பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் படத்திற்கு இசையமைத்து வருகிறார். நடிகர் சூர்யாவுடன் இணைந்து திஷா பட்டாணி ஹீரோயின்னாக நடிக்கிறார் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர்.

அண்மையில் நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் Glimpse வீடியோ வெளியாகி ட்ரெண்டிங் ஆனது. அதனைத் தொடர்ந்து இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்த காணப்படுகிறது. கங்குவா திரைப்படம் காடு, மலை போன்ற பகுதிகளில்  எடுக்கப்பட்டு வருகிறது. நடிகர் சூர்யாவும் இதற்கு 100% ஒத்துழைப்பு கொடுப்பதாக சொல்லப்படுகிறது.

மேலும் படத்தில் சூர்யா மூன்று விதமான கெட்டப்புகளில் நடிக்கிறார் சூர்யாவின் திறமையை பார்த்த படக்குழு அவருக்கு சம்பளத்தை அதிகரித்து கொடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே நடிகர்  சூர்யா 30, 40 கோடி சம்பளம் வாங்கி வரும் நிலையில் கங்குவா திரைப்படத்தில் அவருடைய சம்பளம் சுமார் 50 கோடியாக இருக்கும் என கூறப்படுகிறது.

கங்குவா படம் பெரிய ஹிட் அடிக்கும் பட்சத்தில் தனது சம்பளத்தை நடிகர் சூர்யா மிகப்பெரிய அளவில் உயர்த்தி கொள்வார் என்றும் சமூக வலைதள பக்கத்தில் ஒரு பேச்சுக்கள் எழுந்து உள்ளன. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன வேண்டுமானாலும்..

Leave a Comment

Exit mobile version