கண்டுகொண்டேன்!கண்டுகொண்டேன்! படத்தில் ஐஸ்வர்யா ராய் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவரா!!

0

actress manju warrier is first to act in the role of iswarya rai: தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக கலக்கி வருபவர் நடிகர் தல அஜித் ஆவார். 1990ஆம் ஆண்டில்  என் வீடு என் கணவர் என்ற திரைப்படத்தில் பள்ளி மாணவராக சிறு வேடத்தில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து பிரேம புத்தம், அமராவதி, பாசமலர்கள், பவித்ரா, ராஜாவின் பார்வையிலே, ஆசை, பானுமதி உட்பட இன்னும் பல படங்களில் நடித்து திரையுலகில் சாதனை படைத்து வருகிறார். இவரை இவருடைய ரசிகர்கள் அல்டிமேட் ஸ்டார் என்றும் தல எனவும் அழைத்து வருகின்றன.

2000ஆம் ஆண்டில் தமிழ் திரை உலகில் வெளிவந்த திரைப்படம் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் இத்திரைப்படத்தை ராஜீவ் மேனன் இயக்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து அஜித்திற்கு ஜோடியாக ஐஸ்வர்யாராய் நடித்திருப்பார்  இவரை தொடர்ந்து  பிரபல நடிகர்களான தபு, அப்பாஸ், மமுட்டி  போன்ற நடிகர்கள் ஒன்றிணைந்து நடித்த படம் தான் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படமாகும் . இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இந்த நிலையில் ஐஸ்வர்யா ராய்க்கு முன்பாக மஞ்சு வாரியர் தான் நடிப்பதாக ஒப்பந்தமாகியிருந்தாராம். ஆனால் கால்ஷீட் பிரச்சனையால் இவருக்கு பதிலாக ஐஸ்வர்யா ராய் நடித்தாராம். அப்படத்தில் ஐஸ்வர்யா ராய் முக்கிய வேடத்தில் நடித்திருப்பார். தற்பொழுது மாஞ்சு வாரியர் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி உள்ளார்.