கானா திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு பதில் முதலில் நடிக்க வேண்டியது இவர்தான்.! அட்ஜஸ்ட் பண்ணி இருந்தா அலேக்கா தூக்கி இருக்கலாம் என புலம்பும் நடிகை

0

2018 ஆம் ஆண்டு அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியாகிய திரைப்படம் கனா, இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார் அதுமட்டுமில்லாமல் சிவகார்த்திகேயன், சத்யராஜ் என பல முக்கிய பிரபலங்கள் நடித்து இருந்தார்கள்.

இந்த திரைப்படத்தில் துடுப்பாட்டம், விவசாயம், கிரிக்கெட் ஆகியவற்றை பற்றி கதை அமைந்திருக்கும், படத்திற்கு திபு நினன் தாமஸ் என்பவர் இசையமைத்திருந்தார் படத்திற்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருந்தார், இந்த திரைப்படம் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் சூப்பர் ஹிட்டடித்தது.

இந்தநிலையில் இந்த திரைப்படத்தில் நடிக்க இருந்தது பிரபல பாலிவுட் நடிகை தான் என பிரபல இணையதளத்திற்கு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார், சையாமி க்ஹெர் என்ற பாலிவுட் நடிகை தான் அவர் இவருக்கு வயது 28 ஆகும் இவர் மிகவும் க்யூட்டாகவும் இருப்பார், மேலும் இவர் தெலுங்கு ஹிந்தி மராத்தி ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் கொரனோ வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, அதனால் இவர் அனுராக் காஷ்யப் இயக்கத்தில் இவர் நடித்த choked என்ற திரைப்படம் நெட்டபிலிக்ஸில்  வெளியாகி ஹிட்டடித்தது. இந்த திரைப்படத்தில் வங்கி அதிகாரி போல் நடித்து அசத்தினார், இவரின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

இந்த நிலையில் சமீபத்தில் பிரபல இணையதளத்திற்கு பேட்டி ஒன்றை கொடுத்தார் அதில் அவர் கூறியதாவது கானா திரைப்படத்தில் முதலில் எனக்குதான் வாய்ப்பு வந்தது ஆனால் நான் வேறு ஒரு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்ததால் அந்த வாய்ப்பை ஏற்கமுடியவில்லை எனக் கூறினார்.

பிறகுதான் அந்த வாய்ப்பை ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு  சென்றது, அந்த நேரத்தில் நடிக்க வேண்டிய படங்களின் டேட் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிருந்தாள் கனா திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றிருப்பேன் அந்த திரைப்படம் சிறப்பான திரைப்படம் எனவும் கூறியுள்ளார்.