கனா காணும் காலங்கள் சீரியல் பச்சையா இவர்!! அட இவ்ளோ நடிச்சு இருக்கறா!! இத்தனை நாள் தெரியாமல் போச்சே.!!

kanaa kanum kalangal serial actor pachai acting in seals and movies: 2006 ஆம் ஆண்டு விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் எனும் சீரியல் அப்போது உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இளைஞர்கள் என அனைவரையும் கவர்ந்தது. இந்த சீரியலுக்கு என ஒரு ரசிகர் பட்டாளமே இருந்தது என்பது யாரும் மறுக்க முடியாத கருத்தாகும். இந்த சீரியலில் பள்ளி மாணவர்களாக நடித்த பாதிப்பேருக்கு மேல் தற்போது நடிகர்களாக உள்ளனர்.

இந்த சீரியல் 2006 இல் தொடங்கி 2009 இல் முடிந்தது. இந்த சீரியலில் பச்சை என்கிற கதாபாத்திரத்தில் நடித்த பச்சையப்பன் இவர் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சார்ந்த மாணவராகவும், படிப்பில் சிறந்த மாணவனாகவும்  நடித்து அனைவர் மனதிலும் இடம் பிடித்திருந்தார். இந்த பச்சையப்பனின் உண்மையான பெயர் வாசுதேவ் கிருஷ் மதுசூதன் என்பதாகும்.

pachai4-tamil360newz
pachai4-tamil360newz

இந்த சீரியலுக்கு பிறகு அவர் கலைஞர் தொலைகாட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியில் கலந்து உண்டு நடனமாடினார் என்பது அனைவரும் அறிந்ததே. மேலும் அதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபீஸ் என்ற சீரியலில் நடித்தார்.

pacha-2 -tamil360newz
pacha-2 -tamil360newz

அதுமட்டுமல்லாமல் கனா காணும் காலங்கள் சீரியல் இர்பான் ஹீரோவாக நடித்த கண்ணோட்டம் என்ற படத்தில் வில்லனாக நடித்திருந்தார். அதனைத்தடர்ந்து மேலும் என் கணவன் என் தோழன், மெல்ல திறந்த கதவு, போன்ற சீரியல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதும் இவர் படங்களில் நடிப்பதற்காக வாய்ப்பினை தேடிவருகிறார்.

-pachai-tamil360newz
-pachai-tamil360newz

Leave a Comment