போதையில் போலிஸை எட்டி உதைத்த இளம் பெண்..! சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ.!

kamini fight to police viral video: இந்தியா மட்டுமல்லாமல் பிற நாடுகளையும் பயம்புருத்திய வைரஸ் தான் கொரோனா.  இந்த கொரோனா வைரஸ் காரணமாக நம் நாட்டில் பல்வேறு இடங்களில் ஊரடங்கு போடப்பட்டிருந்தது இதன் மூலமாக அனைத்து கடைகளும் மூடப்பட்டுவிட்டது.

தற்சமயம் இந்த ஊரடங்கு தளர்விற்கு பிறகாக அனைத்து மதுபானக் கடைகளும், சொகுசு பார்களும் திறக்கப்பட்டு தான் காரணமாக ஆண்கள் மட்டும் அல்லாமல் பெண்கள் என அனைவரும் கூத்தடிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

இந்நிலையில் ஈசிஆர் ரோட்டில் மது அருந்திவிட்டு வாகனத்தை தாறுமாறாக ஓட்டி வருகிறார்கள் என தகவல் தெரிந்து கொண்ட போலீஸ் அதிகாரிகள் அந்த இடத்தில் தணிக்கை குழு ஒன்று அமைத்துள்ளார்கள்.

அப்பொழுது ஒரு கார் மிக வேகமாக வந்ததை பார்த்து அந்த காரை மடக்கி பிடித்து போலீசார் விசாரித்து உள்ளார்கள்.  அப்பொழுது அந்த காரில் ஒரு இளம் பெண்ணும் இளைஞரும் இருந்தது தெரியவந்தது அதுமட்டுமில்லாமல் இவர்கள் இருவருமே மிக அதிகமான மது போதையில் இருந்துள்ளார்கள்.

மேலும் இதனை தொடர்ந்து அவர்களிடம் விசாரணையில்  ஈடுபட்ட போலீசாரை அந்த இளம்பெண் மிக கேவலமான கொச்சையான வார்த்தைகளை உபயோக படுத்தி அவர்களைத் திட்டித் தீர்த்துள்ளார்.

இவ்வாறு சம்பந்தப்பட்ட அந்தப் பெண் ஒரு மருத்துவரின் மகளாம் அவருடைய பெயர் காமினி இவர் திரைப்படத் துறையில் துணை இயக்குனராக பணியாற்றி வருகிறாராம்.  இவருடன் போதையில் வாகனத்தில் வந்த சச்சின் பிரசாந்த் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வருகிறாராம்.

இந்நிலையில் இவர்கள் இருவரையும் கைது செய்து போலீசார் மிக தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.

Leave a Comment