பாகுபலி 2 படத்தின் சாதனையை முறியடிக்க முடியாமல் தடுமாறும் கமலின் “விக்ரம்” – சென்னை ஏரியாவில் அள்ளிய மொத்த வசூல்.!

உலக நாயகன் கமலஹாசன் எப்பொழுதும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பது வழக்கம். அந்த வகையில் நடிகர் கமலஹாசன் விஸ்வரூபம் 2, உத்தம வில்லன் திரைப்படத்தை தொடர்ந்து அவர் சினிமாவில் பெருமளவு ஆர்வம் காட்டாமல் இருந்தார் இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ்.

விக்ரம் படத்தின் கதையை கூற அது வித்தியாசமாக இருந்ததால் அந்த திரைப்படத்தில் நடிகர் கமலஹாசன் நடிக்க ஒப்புக்கொண்டார் மேலும் அந்த திரைப்படத்தை மிகப் பிரம்மாண்ட பொருள் செலவில் கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் நிறுவனம்.

படத்தை தயாரித்தது படம் ஒரு வழியாக ஜூன் மூன்றாம் தேதி திரையரங்கில் வெளியானது. இந்த படத்தில் கமலுடன் கைகோர்த்து பகத் பாசில், விஜய் சேதுபதி, சூர்யா, நரேன், காயத்ரி, ஏஜென்ட்  டினா மற்றும் பல பிரபலங்கள் நடித்து அசத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் இருந்தே இந்த படம் மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு ரொம்ப பிடித்து போனதால்..

தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்றது மேலும் வசூலிலும் அடித்து நொறுக்க ஆரம்பித்தது. இதுவரை மட்டுமே கமலின் விக்ரம் திரைப்படம் சுமார் 410 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.  விக்ரம் திரைப்படம் 30 நாட்களை தாண்டி இன்னும் பல்வேறு திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருப்பதால் இந்த படத்திற்கான வசூல் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் சென்னை ஏரியாவில் இதுவரை விக்ரம் திரைப்படம் எவ்வளவு வசூல் செய்தது என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது அதன்படி பார்க்கையில் இதுவரை சென்னையில் மட்டும் சுமார் 17 கோடி வசூல் செய்துள்ளதாம்.. முதல் இரண்டு இடங்களை விக்ரம் படத்தால் பிடிக்க முடியவில்லை.. பாகுபலி 2 படத்தை முந்த இன்னும் விக்ரம் திரைப்படத்துக்கு இன்னும்  ஒரு கோடி வசூல் செய்ய வேண்டும்.

Leave a Comment