வசூலில் புதிய உச்சத்தைக் கண்ட கமலின் விக்ரம் படம் – 4 நாள் முடிவில் உலக அளவில் அள்ளிய தொகை எவ்வளவு தெரியுமா.?

எந்த மாதிரியான கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறி நடித்து வெற்றி காண கூடியவர் நடிகர் கமலஹாசன். இவர் நான்கு வருடங்களுக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் உடன் முதல் முறையாக கூட்டணி அமைத்து நடித்த திரைப்படம் தான் விக்ரம்.

இந்த படத்தில் முக்கிய வில்லனாக விஜய் சேதுபதி மிரட்டியுள்ளார் முக்கிய கதாபாத்திரத்தில் கமலுக்கு இணையாக மலையாள நடிகர் பகத் பாசிலுக்கும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் மிரட்டி எடுத்துள்ளார். இது விக்ரம் படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது. படம் முழுக்க முழுக்க போதைப்பொருள் சம்பந்தப்பட்ட படமாக இருந்தாலும்  சஸ்பென்ஸ் மற்றும் ஆக்சன் என அனைத்துமே.

இதுவரை இல்லாத அளவிற்கு சற்று வித்தியாசமாக இருந்ததால் மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு தற்போது பிடித்துப்போன திரைப்படமாக விக்ரம் படம் மாறி ஓடிக்கொண்டிருக்கிறது.  தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் வசூலிலும் பட்டையை கிளப்புகிறது விக்ரம் படம்.

உலகநாயகன் கமலஹாசன் இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும் இதுவரை எந்த படத்திற்கும் இப்படி ஒரு வரவேற்பு கிடைத்தது இல்லையா முதல் முறையாக விக்ரம் படத்திற்கு கிடைத்துள்ளது. விக்ரம் படம்  தொடர்ந்து அனைத்து ஏரியாக்களிலும் பிரம்மாண்டமான வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

நான்கு நாட்கள் முடிவில் கமலின் விக்ரம் திரைப்படம் உலக அளவில் சுமார் 180 கோடி  மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக தமிழகத்தில் மட்டும் உலகநாயகன்   கமலின் விக்ரம் திரைப்படம் நான்கு நாட்கள் முடிவில் சுமார் 77 கோடி வசூலித்து உள்ளது.

Leave a Comment