RRR படத்தின் வசூலை முக்கிய இடத்தில் பந்தாடிய கமலின் விக்ரம் படம் – எங்கு தெரியுமா..

உலக நாயகன் கமலஹாசன் தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், பாடகர், தயாரிப்பாளர் போன்ற பன்முக தன்மை கொண்டவர். மேலும் கமல்ஹாசன் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கனகச்சிதமாக அதில் நடித்து சிறந்த நடிகை வெளிப்படுத்தக் கூடியவர். அதனால் இவரை இப்பொழுது உள்ள இளம் நடிகர்கள் பலரும் ரோல் மாடலாக கொண்டு நடித்து வருகின்றனர்.

இப்படி இருக்கின்ற நிலையில் கமலஹாசன் நடிப்பில் நீண்ட இடைவேளைக்கு பிறகு உருவாகி வெளிவந்த விக்ரம் திரைப்படம் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தது. இந்தப் படத்தை இளம் இயக்குனர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். இவர் இதற்கு முன் இயக்கிய மாஸ்டர், கைதி போன்ற படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கமல் நடிப்பில் உருவான விக்ரம் படத்தை கமலஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இல் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கமலின் சொந்த தயாரிப்பில் விக்ரம் படம் உருவாகி உள்ளதால் படத்தில் பல புதிய விஷயங்களைக் கொண்டு வந்துள்ளார். மேலும் இந்த படத்தில் கமலுக்கு நிகராக விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா போன்ற பலரும் சிறப்பாக நடித்திருந்தனர்

அது இந்த படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது. விக்ரம் படம் போட்ட பட்ஜெட்டை தாண்டி பல கோடி வசூலை குவித்துள்ளது. இதனால் படக்குழு மற்றும் கமல் இருவருமே மிகுந்த சந்தோஷத்தில் இருந்து வந்த நிலையில் அண்மையின் இந்த படம் ஓடிடி தளத்திலும் ரிலீஸ் ஆகி அங்கையும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதுவரை தமிழகத்தில் மட்டும் 400 கோடிக்கு மேல் வசூல் அள்ளி வருகின்ற விக்ரம் திரைப்படம்

UAE – GCC இடங்களில் அதிக வசூல் செய்த தென்னிந்திய திரைப்படங்கள் குறித்த விவரம் வெளியாகி உள்ளது. அங்கு விக்ரம் திரைப்படம் 5.05 M வசூலை குவித்து RRR படத்தின் 4.72 M வசூலை முந்தி உள்ளது. இதனிடையே தற்போது விக்ரம் படத்திற்கு அதிகமாக அங்கு பாகுபலி 2, கே ஜி எஃப் 2, லூசிபர் போன்ற படங்கள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment