வசூலில் புதிய உச்சத்தை தொட்ட கமலின் “விக்ரம் படம்” – உலகம் முழுவதும் அள்ளிய கோடிகள் எவ்வளவு தெரியுமா.?

அண்மையில் லோகேஷ் கனகராஜ் கமல் கூட்டணியில் உருவான விக்ரம் திரைப்படம் தற்போது திரையரங்கில் நல்ல கல்லா கட்டி வருகிறது. இந்த படம் சுமார் 120 கோடியில் இருந்து 150 கோடி வரை உள்ள பட்ஜெட்டில் உருவானது. ஆனால் படம் வெளிவந்து போட்ட பட்ஜெட்டை தாண்டி பல மடங்கு வசூல் ஈட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் கமல் நடிப்பில் நீண்ட இடைவேளைக்கு பிறகு வந்ததால் கமல் ரசிகர்கள் படத்தை கொண்டாடிய தீர்த்தனர் அது மட்டும் இல்லாமல் மறுபக்கம் கமலுடன் இணைந்து இந்த படத்தில் விஜய் சேதுபதி, நரேன், சூர்யா போன்ற பல முக்கிய நட்சத்திர பட்டாளங்களும் நடிப்பில் அசத்தியிருந்தனர்.

இதனால் படம் முழுக்க ஆக்ஷன் காட்சிகளில் மக்களின் சுவாரசியத்தை குறைக்காமல் கொண்டு சென்றது. பான் இந்திய அளவில் வெளியான கமலஹாசனின் விக்ரம் படம் தமிழை தாண்டி கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற பல இடங்களிலும் நல்ல வசூலை ஈட்டி வருகின்றன.

இந்த படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இதற்கு முன் மாஸ்டர், கைதி போன்ற ஆக்சன் படங்களை கொடுத்தவர் அந்த படங்கள் அவருக்கு ஒரு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. அதனுடைய லோகேஷ்க்கு கமலுக்கு கதைக்கூற வாய்ப்பு கிடைத்தது.

அந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டு அவர் இயக்கிய விக்ரம் படம் பிளாக்பஸ்டர் மூவியாக அமைந்தது. இந்த நிலையில் விக்ரம் படம் வெளிவந்து இதுவரை 25 நாட்கள் கடந்த நிலையில் மொத்தமாக உலகம் முழுவதும் 410 கோடி வசூலை அள்ளி சென்று கொண்டிருக்கிறது.

Leave a Comment