கமலின் “விக்ரம் திரைப்படம்” இதுவரை சென்னை ஏரியாவில் மட்டுமே இத்தனை கோடி வசூலா..

உலக நாயகன் கமலஹாசன் தனது இளம் வயதிலேயே சினிமாவில் ஹீரோவாக நடிக்க தொடங்கி விட்டார். அப்படி இவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் ஒவ்வொரு படங்களிலும் அவரது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மக்களை அசர வைத்துள்ளார். மேலும் கமலஹாசன் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும்..

அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி தன்னை தத்துரூபமாக மாற்றி சிறப்பாக நடிக்க கூடியவர். கமலஹாசன் பல கெட்டப்புகளில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமாவில் நடிப்பை தவிர பன்முகத்தன்மை கொண்டவராக பயணித்து வந்த கமலஹாசன் நடிப்பில் சில வருடங்கள் கழித்து வெளியான விக்ரம் திரைப்படம் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.

தற்போது உள்ள பல இளம் நடிகர்கள் ரசிகர்களை கவரும் வகையில் சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து அசந்துகின்றனர் அவர்களது படமும் மாபெரும் வசூல் வேட்டை நடத்துகின்றன. இப்படி ஓடிக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படமும் எதிர்பாராத அளவு வசூலை அள்ளி உள்ளது. குறிப்பாக அஜித், விஜய்யின் படங்களின் வசூலை எல்லாம் அசால்டாக முறியடித்தது விக்ரம் படம். இது படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார்.

படத்தில் கமல் நடித்தும் தயாரித்தும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விக்ரம் படம் போட்ட பட்ஜெட்டை தாண்டி பல கோடி வசூலை அள்ளியதால் தயாரிப்பாளர் கமலஹாசன் பட படக்குழுவிற்கு பரிசு பொருட்களையும் வழங்கினார். அந்த வகையில் கடந்த ஜூன் மூன்றாம் தேதி வெளியான விக்ரம் திரைப்படம்..

இதுவரை 7 வாரங்களை கடந்துள்ள நிலையில் தமிழகத்தில் மட்டும் இதுவரை மொத்தமாக 182 கோடியும், உலகம் முழுவதும் 432 கோடியும் வசூலித்துள்ளது. மேலும் விக்ரம் படம் இந்த வருடம் வெளியான ஹிட் பட லிஸ்டில் டாப் 5 யில் இடம் பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து விக்ரம் படம் சென்னையில் மட்டும் மொத்தமாக 17.26 கோடி வசூலித்துள்ளது.

Leave a Comment