உலக நாயகனை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளருக்கு இப்படி ஒரு நிலைமையா.? கண்ணீருடன் கமல் போட்ட பதிவு

Kamal : தமிழ் சினிமாவில் இன்று வளர்ந்து வரும் பல நடிகர், நடிகைகளுக்கு  முன் மாதிரியாக திகழ்ந்து வருபவர் உலக நாயகன் கமலஹாசன். இவர் களத்தூர் கண்ணம்மா என்னும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து ஹீரோவாக நல்ல கதை அம்சமுள்ள படங்களை கொடுத்து இன்று உச்ச நட்சத்திரமாக இருக்கிறார்.

இதுவரை  240க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்பொழுது கூட பிரமாண்ட இயக்குனர் ஷங்கருடன் கைகோர்த்து இந்தியன் 2  படத்தில் நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து கல்கி படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

மேலும் ஹச். வினோத்துடன் ஒரு படம், லோகேஷ் உடன் ஒரு படம், மணிரத்தினத்துடன் ஒரு படம்   ரெடியாக இருக்கிறார் இதனால் அடுத்த மூன்று வருடங்களுக்கு அவர் பிஸியான ஹீரோவாக பார்க்க படுகிறார்.  இப்படிப்பட்ட கமல் ஏவிஎம் நிறுவனத்தின் களத்தூர் கண்ணம்மா என்ற படத்தில் நடித்த அறிமுகமானார் இந்த படத்தில் இவரை நடிக்க வைக்க மிக உறுதுணையாக இருந்தவர் அருண் வீரப்பன் அவர்கள்.

இவர் களத்தூர் கண்ணம்மா படத்தின் போது தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றினார் அதன் பிறகு பல்வேறு பொறுப்புகளில் வசித்து வந்த இவர் 90 வயதில் இறந்துள்ளார் அருண் வீரப்பன் இறப்பிற்கு உலக நாயகன் கமலஹாசன் ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை போட்டு உள்ளார்.

ஏவி மெய்யப்பன் அவர்களின் மாப்பிள்ளையும், கியூப் நிறுவன அதிபர் செந்திலின் தந்தையுமான அருண் வீரப்பன் மறைந்து விட்டார் என்பதறிந்து துயருற்றேன். நான் அறிமுகமான களத்தூர் கண்ணம்மாவின் தயாரிப்பு நிர்வாகி அவர்.

சினிமா தயாரிப்பில் ஆழங்கால்பட்ட அனுபவம் மிக்கவர். சினிமாவின் தீராக் காதலராக பல்லாண்டு காலம் திரைத்துறைக்குத் தன் பங்களிப்பினை அளித்தவர். அவருக்கு என் அஞ்சலி. இதை பார்த்த ரசிகர்கள் பழைய மறக்காத கமல் எனக் கூறி இந்த செய்தியை மேலும் பரப்பி வருகின்றனர்.