மெகா பட்ஜெட் படத்தில் உலக நாயகன் கமல்ஹாசன்.!

0
Kamal_Haasan
Kamal_Haasan

சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் சிரஞ்சீவி, அமிதாப்பச்சன், சுதீப், விஜய் சேதுபதி, நயன்தாரா, தமன்னா உள்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சைரா நரசிம்ம ரெட்டி’. இந்தப் படம் வருகின்ற 2ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், “என் நண்பர் கமல்ஹாசன் ‘சைரா’ படத்தின் தமிழ் பதிப்பிற்கு அறிமுக காட்சிக்கு பின்னணிக் குரல் கொடுத்துள்ளார். தமிழ் பதிப்பிற்கு குரல் கொடுக்குமாறு நான் அணுகிய உடனே அவர் சம்மதம் தெரிவித்தார். அவருக்கு நன்றி” என சிரஞ்சீவி கூறினார்.

மேலும் கமலஹாசன் தற்போது விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் அதுமட்டுமில்லாமல் இந்தியன்2 திரைப்படத்திலும் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.