கமலை தொடர்ந்து இயக்குனருக்கு பரிசு கொடுத்த ஜெயிலர் பட நடிகர்.! உச்சகட்ட சந்தோஷத்தில் நெல்சன்…

0
jailer
jailer

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் முதலில் சிம்புவை வைத்து வேட்டை மன்னன் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார் ஆனால் ஒரு சில பிரச்சனையின் காரணமாக இந்த படம் பாதியில் நிறுத்தப்பட்டது அதன் பிறகு சில ஆண்டுகள் கழித்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் இயக்குனர் நெல்சன் திலீப்குமார்.

இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்ததாக விஜயை வைத்து பீஸ்ட் திரைப்படத்தை இயக்கினார் இந்த திரைப்படம் கலையான விமர்சனத்தை பெற்று இருந்தாலும் வசூல் ரீதியாக அமோக வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து தன்னுடைய மூன்றாவது படத்தை தலைவர் ரஜினியை வைத்து இயக்கி வருகிறார் இந்த படத்திற்கு ஜெயிலர் என்ற தலைப்பு வைத்துள்ளனர் மேலும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதால் படப்பிடிப்பு மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதனை தொடர்ந்து இந்த படத்தில் இருந்து சில அப்டேட்டுக்கள் வெளியாகி கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ஜாக்கி ஷெரிப், யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன், உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து ஜெயிலர் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாக இருப்பதாக சில தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு முடிவடையும் தருவாயில் இருக்கும் நிலையில் இந்த படத்தில் நடித்த நடிகர் ஒருவர் இயக்குனர் நெல்சன் திலிப் குமார் அவர்களுக்கு ஒரு ஆச்சரிய பரிசோதனை வழங்கியிருக்கிறார். அதாவது இந்த படத்தில் வில்லனாக நடிக்கும் ஜாக்கி ஷெரிப் அவர்கள் இயக்குனர் நெல்சன் திலிப் குமாருக்கு ஒரு இருசக்கர வாகனம் ஒன்றை பரிசளித்துள்ளார்.

இதை கொண்டாடும் விதமாக அந்த இருசக்கர வாகனத்தில் உட்கார்ந்து படி போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை நெல்சன் திலீப்குமார் அவர்கள் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

nelson
nelson