கமலை தொடர்ந்து லியோ படத்தில் இணைந்த முக்கிய பிரபலம்.! வெளியான தகவலால் உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் பல முன்னணி நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வருகின்றனர் இதனை தொடர்ந்து சமீபத்தில் இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் கமல் அவர்கள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது இதனை தொடர்ந்து தற்போது மேலும் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.

அதாவது லியோ திரைப்படத்தில் பிக் பாஸ் பிரபலம் ஒருவர் இனிய இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கிறது என்றே சொல்லலாம். மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி அதன் பிறகு கைதி, விக்ரம், மாஸ்டர், என்று தொடர் வெற்றி படங்களை கொடுத்து வந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது நடிகர் விஜய்யை வைத்து லியோ திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இவர்கள் இருவரும் மாஸ்டர் என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக இணைந்தார்கள் இந்த கூட்டணி முதல் படமே மிகப்பெரிய அளவில் வெற்றி கண்டதை தொடர்ந்து தற்போது இந்த கூட்டணி மறுபடியும் இணைந்துள்ளது. இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து இருக்கிறது அது மட்டுமல்லாமல் இயக்குனர் லோகேஷ் கனராஜ் மீது உள்ள நம்பிக்கையாலும் இந்த படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.

இந்த திரைப்படத்தில் விஜய் உடன் இணைந்து திரிஷா, பிரியா ஆனந்த், கௌதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், சஞ்சய் தத், மிஸ்கின், உள்ளிட்ட பலர் நடிக்க இருப்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதனை தொடர்ந்து இந்த திரைப்படம் விக்ரம் படத்தின் தொடர் கதையாக தான் இருக்கும் என்று பல ஊடகங்களில் கூறப்பட்டு வருகிறது.

அதற்கு ஏற்றார் போல சமீபத்தில் வெளியான லியோ படத்தின் டைட்டில் ப்ரோமோவில் பல சஸ்பென்சுகளை வைத்திருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அதுமட்டுமல்லாமல் லியோ திரைப்படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிகர் கமல் அவர்கள் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது இதனை தொடர்ந்து பிக் பாஸ் மூலம் பிரபலமான அபிராமி அவர்கள் லியோ திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தற்போது ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.

அதாவது அபிராமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லோகேஷ் கனகராஜ் உடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் இதை பார்த்த ரசிகர்கள் அபிராமி லியோ படத்தில் இணைந்து விட்டார் என்று கூறி வருகிறார்கள். ஆனால் இது உண்மையான தகவலா என்று தெரியவில்லை. அப்படி அவர் இணைந்து உள்ளார் என்றால் விரைவில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment