கார்த்தி படத்தில் நடிக்கவிருந்த கமல்..! கடைசி நேரத்தில் கைநழுவியது எப்படி.? எந்த படம் தெரியுமா..

0
karthi-and-kamal-
karthi-and-kamal-

நடிகர் கார்த்தி அவரது அண்ணனை போல தொடர்ந்து சினிமா உலகில் தனது திறமையை வெளிக்காட்டும் வகையில் வித்தியாசமான திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அப்படி இவர் தற்பொழுது நடித்துள்ள பொன்னியின் செல்வன், சர்தார், விருமன் என அடுத்தடுத்து படங்கள் வெளிவர இருக்கின்றன.

ஒவ்வொரு  திரைப்படத்திலும் வித்தியாசமாக நடித்துள்ளார் கார்த்தி. இந்த படங்கள் வெற்றி பெறும் பட்சத்தில் கார்த்தியின் சினிமா மார்க்கெட் அசுர வளர்ச்சியை எட்டும் என சொல்லப்படுகிறது. கார்த்தி நடித்துள்ள பொன்னியின் செல்வன் மற்றும் சர்தார் ஆகிய படங்களுக்கான எதிர்பார்ப்பு வேற லெவலில் இருக்கிறது. இப்படி இருக்கின்ற நிலையில் கார்த்தி படத்தில் கமல் நடிக்க இருந்தார் என்ற செய்தி தற்போது வெளியாகி உள்ளது.

கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் கொம்பன் இந்த படம் முழுக்க முழுக்க ஆக்சன் மற்றும் செண்டிமெண்ட் கலந்த திரைப்படமாக உருவாகி இருந்தது இந்த படத்தில் கார்த்தி உடன் கைகோர்த்து ராஜ்கிரண், லட்சுமிமேனன், தம்பி ராமையா, கருணாஸ், வேல் ராமமூர்த்தி, மாரிமுத்து, கோவை சரளா, விஜயன், நமோ நாராயணா மற்றும் பலர் நடித்து அசத்தி இருந்தனர்.

இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் ராஜ்கிரண் நடித்திருப்பார் ஆனால் அந்த கதாபாத்திரத்திற்கு முதலில் முத்தையா கமலஹாசனை வைத்து நடிக்கத்தான் அதிகம் ஆர்வப்பட்டார் சொல்லப்போனால் இந்த கதாபாத்திரத்திற்கு கமலை மனதில் வைத்து தான் எழுதினாராம் கமலை வைத்து இந்த கதாபாத்திரத்தை எடுக்க முடியாமல் போக..

பின் ராஜ்கிரணுக்கு அந்த வாய்ப்பு கிடைத்ததாம் தற்பொழுது இயக்குனர் முத்தையா கமலஹாசனிடம் ஒரு கதையை கூறி வந்துள்ளதாக கூறப்படுகிறது. கமலுக்கும் அது ரொம்ப பிடித்துப் போய் உள்ளதாம் விரைவில் இந்த கூட்டணி இணைய அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.