கமல் போலீசாக நடித்த “வேட்டையாடு விளையாடு” படத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தது – இந்த மலையாள நடிகர் தானாம்.! பல வருடம் கழித்து வெளிவரும் தகவல்

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி பின் நடிகராக பல்வேறு படங்களில் நடித்து அசத்தி வருபவர் இயக்குன கவுதம் வாசுதேவ் மேனன். இவருக்கு பிரதான தொழில் இயக்குனர் என்பதால் டாப் நடிகர்களை வைத்து சிறப்பான படங்களை இயக்கிய வெற்றி கண்டு வருகிறார்.

அந்த வகையில் 2006 ஆம் ஆண்டு இவர் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் திரைப்படம் வேட்டையாடு விளையாடு. இந்தப் படத்தில் கமலுடன் கைகோர்த்து ஜோதிகா, பிரகாஷ்ராஜ், டேனியல் பாலாஜி, கமலினி முகர்ஜி மற்றும் பல நட்சத்திர பட்டாளங்கள் இந்த படத்தில் நடித்து அசத்தியிருக்கிறார்.

இந்த படம் யாரும் எதிர் பார்க்காத அளவுக்கு விமர்சன ரீதியாக அடித்து நொறுக்கியது மேலும் வசூலிலும் நன்றாகவே கல்லா கட்டியது.இந்த படமும் உலகநாயகன் கமலஹாசன் கேரியரில் ஒரு நல்ல படமாக இது அமைந்தது. இன்றும் இந்த திரைப்படமும் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படி இருக்கின்ற நிலையில் ஒரு சூப்பர் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது அதாவது வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் முதன் முதலில் கமலஹாசனுக்கு பதிலாக வேறு ஒரு நடிகரை நடிக்க வைக்க தான் படக்குழு முயற்சி செய்ததாம்.

அந்த பிரபல நடிகர் வேறுயாருமல்ல மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் தானாம். சில காரணங்களால் அவர் இந்த படத்தை தவற விடவே பிறகு வேட்டையாடு விளையாடு படக்குழு உலக நாயகன் கமலஹாசனை சந்தித்து உள்ளது படத்தின் கதை சிறப்பாக இருந்த காரணத்தினால் கமலும் இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

Leave a Comment