கமல் – வினோத் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் “ஷூட்டிங் தேதி” அறிவுப்பு.? உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக ஓடிக் கொண்டிருப்பவர் ஹச். வினோத் இவர் இதுவரை விரல் விட்டு எண்ணும் அளவிற்கு தான் படங்களை எடுத்திருக்கிறார் ஆனால் அந்த படங்கள் அனைத்துமே வெற்றி படங்கள் தான்.  ஹச் வினோத் இயக்கத்தில்  அஜித் நடிப்பில் கடைசியாக வெளிவந்த துணிவு திரைப்படம்.

கடந்த பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது படம் முழுக்க முழுக்க நல்ல மெசேஜ், ஆக்சன், காமெடி என அனைத்தும் கலந்த ஒரு அற்புதமான படமாக இருந்ததால் ரசிகர்களையும் தாண்டி குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று 230 கோடிக்கு மேல் வசூல் அள்ளி அசத்தியது.

இதனை தொடர்ந்து அடுத்தடுத்த டாப் நடிகருடன் படம் பண்ண வாய்ப்பு ஹச். வினோத்துக்கு அமைந்துள்ளது. அந்த வகையில் தனுஷ், கமல் போன்ற நடிகர்களை வைத்து படம் பண்ண இருக்கிறார். முதலாவதாக கமலுடன் கூட்டணி அமைக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  இதற்கான அறிவிப்பு வெகு விரைவிலேயே வரும் என சொல்லப்படுகிறது.

கமல் விக்ரம் படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கருடன் கூட்டணி அமைத்து கிடப்பில் இருந்த இந்தியன் 2 திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இதை முடித்துவிட்டு  வந்த உடனேயே கமல் – ஹச். வினோத் கூட்டணியில் படப்பிடிப்பு தொடங்கும் என முன்பே தகவல்கள் வெளிவந்த நிலையில் தற்பொழுது ஒரு உறுதியான தகவல் வெளியாகி உள்ளது.

கமல் – ஹச் வினோத் கூட்டணியில் உருவாகும் படம் ஜூன் மாதம் முதல் துவங்கும் என தகவல் வெளிவந்துள்ளது. இதனால் ஹச். வினோத் படத்தின் கதைக்கு ஏற்ப நடிகர், நடிகைகள் மற்றும் முதல் கட்ட பணிகளை தீவிரமாக மேற்கொண்டு இருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது மக்கள் மத்தியில் அதிகரித்து காணப்படுகிறது.

Leave a Comment