கமலின் விக்ரம் திரைப்படத்தின் திரையரங்க ரிலீஸ் உரிமையை தட்டி தூக்கிய பிரபல நிறுவனம்.! வெளியானது அசத்தலான போஸ்டர்..

மாநகரம், கைதி, மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது விக்ரம் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் உலகநாயகன் கமலஹாசன் பகத் பாசில், விஜய் சேதுபதி ,அமிதாப் பச்சன், அர்ஜுன் தாஸ், ஆண்டனி, காயத்ரி சங்கர், ஷிவானி நாராயணன், தர்ஷனா ராஜேந்திரன். ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்

அதுமட்டுமில்லாமல் மைனா நந்தினி இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் இந்த திரைப் படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பிரபல நிறுவனம் வாங்கியுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கமலஹாசனின் விக்ரம் திரைப் படத்தின் தமிழக திரையரங்கு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின்  ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக சமீபத்தில் தகவல் கசிந்ததை பார்த்தோம் இந்த நிலையில் இந்த தகவல் சற்று முன் உறுதியாகி உள்ளது. ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தங்களுடைய அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடித்துள்ள விக்ரம் படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற்றிருப்பதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தினை வருகின்ற ஜூன் மூன்றாம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது அதற்கான புதிய போஸ்டரையும் தற்பொழுது வெளியிட்டுள்ளது இந்த போஸ்டர் இணையதளங்களில் படுவேகமாக வைரலாகி வருகிறது.

கமலஹாசனுக்கு இந்த திரைப்படம் மிகப்பெரிய திரைப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது ஏனென்றால் கமல்ஹாசனின் ரசிகர்கள் கமலை திரையில் காண ஆவலுடன் இருக்கிறார்கள் நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த திரைப்படம் வெளியாவதால் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

Leave a Comment