Ajith : தமிழ் சினிமாவில் இன்று உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் நடிகர்கள் பலரும் வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து வருகின்றனர் அப்படி ரஜினி கமல் விஜய் சூர்யா போன்ற நடிகர்கள் படங்களின் அப்டேட்டுகள் வெளிவந்திருக்கின்றன ஆனால் அஜித் படத்தில் கமிட்டாகியும் அது குறித்து எந்த தகவலும் வெளிவராதது அஜித் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.
அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு விடாமுயற்சி படத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. லைகா நிறுவனம் தயாரிக்க மகிழ்ச்சியில் மேனி இயக்கம் உள்ளதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் இரண்டு மாதங்கள் ஆகியும் எந்த ஒரு அப்டேட்டும் வெளிவராமல் இருப்பதால் விடாமுயற்சி டிராப் ஆகிவிட்டதா என பலரும் கேள்வி கேட்கின்றனர்.
இதற்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்து தற்பொழுது பார்ப்போம்.. லைகா நிறுவனம் விடாமுயற்சி படத்தை தாண்டி பல படங்களை தயாரிக்கிறது அதில் ஒன்றாக இந்தியன் 2 படத்தை மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுத்து வருகிறது இந்த படத்தில் கமல் பல கெட்டப்புகளில் நடிக்கிறார் குறிப்பாக பிளாஷ்பேக் காட்சியில் கமல் 20வயது குறைத்தவராக காட்டுவதற்கான டெக்னாலஜி வேலைகளை இயக்குனர் ஷங்கர் பிசியாக வேலை பார்த்து வருகிறார்.
லைகா நிறுவன குழுவும் அமெரிக்கா சென்றுவிட்டதாம்.. விடாமுயற்சி பட இயக்குனர் மகிழ்திருமேனி படத்தில் நடிக்க நடிகர் நடிகர்கள் எல்லாம் தேர்வு செய்துவிட்டார். லைகா நிறுவன குழு இங்கு இல்லை அவர்களிடம் காட்டிய பிறகுதான் அஜித்திடம் இந்த லிஸ்ட்டை காட்டி உறுதியான பிறகு அவர்களுக்கான கதையை எழுத முடியும்..
மேலும் அந்த ஆர்டிஸ்ட்களின் சம்பளம் கால்ஷீட் விவரங்களை எல்லாம் தயாரிப்பு நிறுவனமான லைகா தான் தன்னுடைய பட்ஜெட்டின் படி அதற்குள் ஓகே சொல்ல வேண்டும். லைகா தற்போது இந்தியன் 2 படத்திற்கான வேலைகளை பார்த்துக் கொண்டிருப்பதால் விடாமுயற்சி படத்திற்கான வேலைகள் தாமதம் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.