தளபதி 67 திரைப்படத்தின் டீசரை பார்த்து விட்டு கமல் சொன்னார் ஒத்த வார்த்தை.! அடுத்த வேட்டைக்கு காத்திருக்கும் யோகேஷ் கனகராஜ்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் கமல் இவர் தற்போது தளபதி 67 திரைப்படத்தின் டீசரை பார்த்து விட்டு லோகேஷ் கனகராஜ் இடம் ஒரு கோரிக்கையை வைத்துள்ளார் இதனால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் நடிகர் விஜய்  தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்து விட்டார் இந்த திரைப்படம் கடந்த ஜனவரி 11-ம் தேதி பொங்கலை முன்னிட்டு வெளியானது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடனே இணைந்து தற்போது நடித்து வருகிறார் நடிகர் விஜய்.

இந்த படத்திற்கு தற்காலிகமாக தளபதி 67 என்று அழைத்து வரும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வரும் நிலையில் எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகாமல் இருந்து வந்தது. இதனை தொடர்ந்து இன்னும் குறுகிய நாட்களில் தளபதி 67 திரைப்படத்தின் அப்டேட் வெளியாகி விடும் என்று லோகேஷ் கனகராஜ் அடிக்கடி கூறி வந்தார்.

அதன் பிறகு சமீபத்தில் பிப்ரவரி 1,2,3, தேதிக்குள் தளபதி 67 திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிவிடும் என்று கூறியிருந்தார். இதனாலேயே பிப்ரவரி மாதம் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக எதிர்பார்த்து காத்து இருந்தார்கள்.

இந்த நிலையில் பிப்ரவரி மாதம் தொடங்கும் முன்பு ஜனவரி 31ஆம் தேதி தளபதி 67 திரைப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தளபதி 67 திரைப்படத்தில் யார் யார் நடிக்க இருக்கிறார்கள் என்ற அப்டேட் வெளியாகியிருக்கிறது.

அந்த வகையில் தளபதி 67 திரைப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஸ்கின், உள்ளிட்ட பலர் நடிக்க இருப்பதாக தற்போது செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ அறிவித்திருக்கிறது. இதனை தொடர்ந்து மேலும் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் யார் யார் என்ற அறிவிப்பை நாளைக்கு வெளியிட  உள்ளதாக கூறியுள்ளனர்.

இந்த நிலையில் லாக்டவுன் டைமில் தளபதி 67 திரைப்படத்தின் முழு கதையை முடிந்துவிட்டாராம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அதுமட்டுமல்லாமல் இந்த கதையை கமலிடம் கூறியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் தளபதி 67 திரைப்படத்தின் டீசரை கமல் அவர்கள் பார்த்துவிட்டு தளபதி 67 திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடிக்க இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இடம் கேட்டு இருக்கிறார்.

இதற்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கமலை நடிக்க வைக்க சிறு மாற்றம் செய்து உள்ளதாக கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் தளபதி 67 திரைப்படத்தில் ஒரு 20 நிமிட காட்சியில் கமல் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி பரவி வருகிறது.

Leave a Comment