முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரிடம் இருந்து சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்ற கமல்.! யாரும் பார்த்திராத அரிய புகைப்படம் இதோ.

0

தமிழ் சினிமா உலகில் எத்தனை நடிகர்கள் வேண்டுமானாலும் சிறந்த படத்தைக் கொடுத்து தன்னை வளர்த்துக் கொண்டாலும் அவர்களுகான புகழ் எப்பொழுதும் மக்கள் மத்தியில் நிலைத்து நிற்குமா என்றால் அது கேள்விக்குறிதான. படத்தின் வசூலையும் தாண்டி அவரது  நடிப்பு சிறப்பாக இருந்தால் மட்டுமே அந்த படத்தை பற்றியும் அந்த ஹீரோவை பற்றியும் அதிக நாட்கள் மக்களும், ரசிகர்களும் பேசுவார்கள். அதை பல வருடங்களாக செய்து காட்டி வந்தவர்தான் உலகநாயகன் கமலஹாசன்.

தற்போது உலக நாயகன் கமல்ஹாசன் சினிமாவில் பெரிய அளவில் நடிக்கவில்லை என்றாலும் அவரது படங்கள் இன்னும் மக்கள் மத்தியில் பேசப்பட்டு தான் வருகிறது அந்த அளவிற்கு படத்தின் கதைக்கு ஏற்றவாறு ஒன்றி நடிப்பார். சிவாஜிக்கு பிறகு எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்கு ஏற்றவாறு தன்னை முழு அர்ப்பணிப்போடு ஈடுபடுத்தி நடிப்பது அவருக்கு ரொம்ப பிடிக்கும்.

அந்த காரணத்தினால் தான்கமல் அவர் சிறந்த நடிகர் என்ற பெயரை பெற்றுள்ளதோடு உலகநாயகன் என்ற அந்தஸ்தையும் தன்வசப்படுத்தி உள்ளார்.  இப்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் “விக்ரம்” என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் அவர் கண்தெரியாத நபராக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

அதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலேயே எகிறியுள்ளது. விக்ரம் திரைப்படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் கமலின் சொந்த நிறுவனமான ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் எடுத்து வருகிறது. கமல் விக்ரம் படத்தை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் உலக நாயகன் கமலஹாசனின் அன்சீன் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னாள்  நடிகரும் முன்னாள் முதலமைச்சருமான எம்ஜிஆர் அவருடன் இணைந்து கமல் எடுத்துக்கொண்ட புகைப்படமும் இணையதள பக்கத்தில் தீயாய் பரவி வருகிறது எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்த 80 -81 காலகட்டத்தில் அந்த ஆண்டின் சிறந்த நடிகருக்கான விருதை அவரிடமிருந்து கமல் பெற்றார் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இது.

MGR and kamal
MGR and kamal