சினிமா உலகை பொருத்தவரை நடிகர் நடிகைகள் மற்றும் காமெடிகளை தான் பெரிய அளவில் பேசப்படுவார்கள் ஆனால் குணச்சித்திர நடிகர்கள் படங்களில் நடிக்கும் போது அவரை புகழ்வதுடன் சரி அப்புறம் அவரைக் கண்டு கொள்ளவே மாட்டார்கள் ஆனால் ஒரு சிலர் தனது நடிப்பின் மூலம் தொடர்ந்து பேச வைப்பார்கள் அப்படியே தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நபர் இளவரசர்.
இவர் சினிமா உலகில் வில்லன், குணசத்திர கதாபாத்திரம், முக்கிய காதபத்திரம், காமெடியன் என அனைத்து கதாபாத்திரங்களிலும் நடித்து வெற்றி கண்டு வருகிறார். குறிப்பாக கிராமத்து கதாபாத்திரம் இவருக்கு சூப்பராக பொருந்தும் அந்த வகையில் முத்துக்கு முத்தாக படத்தில் ஹீரோகளுக்கு அப்பாவாக நடித்து ரசிகர்களை கண்கலங்க வைத்திருப்பார்.
இது போன்று பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடிக்க வருவதற்கு முன் ஒளிபதிவாளராகவும் இருந்து பயணித்துள்ளார் இப்படிப்பட்ட இளவரசு சமீபத்திய பேட்டி ஒன்றில் கமல் குறித்து பேசி உள்ளார் அது குறித்து விழா வாரியாக பார்ப்போம்.. பாபநாசம் படத்தில் கமலின் நடிப்பு குறித்த அவர் பேசி உள்ளார் ஒரு கதாபாத்திரத்தை கமல் தான் கொலை செய்துள்ளார் என நினைக்கும் கலாபாவன் மணி என்னிடம்..
அதை திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே இருப்பார் அப்பொழுது கமல் எங்களின் முன்னே நடந்து போவார். பின்னால் திரும்பி பார்க்க கூடாது ஆனால் நம்மை பற்றி தான் பேசுகிறார்கள் என்பதை உடல் மொழியில் காட்ட வேண்டும். அதேநேரம் எதுவும் செய்யாதது போல் இயல்பாக நடக்க வேண்டும் இத்தனை நுணுக்கங்கள் அந்த காட்சியில் இருக்கும் அவர் நடித்து முடித்ததும்..
அவர் எப்படி நடித்தார் என்பதை மானிடரில் சென்று பார்த்து அசந்து போனேன் சண்டாளன் சார் நீங்க என சொல்லிவிட்டேன் பின் அய்யோ அவரிடம் இப்படி சொல்லி விட்டோமே என நினைத்து அவரிடம் தயங்கினேன் அவரோ சிரித்துக் கொண்டே தோளில் தட்டி விட்டு சென்று விட்டார் என இளவரசு பேசி இருந்தார் இந்த தகவல் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.