தேசியவிருது வாங்கிய இயக்குனருடன் கூட்டணி வைத்த கமல்.!

0

தொலைக் காட்சிகளுக்கு இடையே பலத்த போட்டி நிலவி வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் அதனால் ஒவ்வொரு தொலைக்காட்சியும் புதிய புதிய ரியாலிட்டி ஷோ மற்றும் சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் படத்தின் தலைப்பில் சீரியலை ஒளிபரப்பி அதில் வெற்றி கண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை கமலஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சி கடந்த நான்கு வருடங்களாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமும் இருந்துவருகிறது தற்பொழுது ஐந்தாவது சீசனில் அடி எடுத்து வருகிறது. அதனால் இந்த நிகழ்ச்சியில் யார் போட்டியாளராக கலந்து கொள்ளப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வருகிறது.

மேலும் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்துகொள்ளும் பிரபலங்களின் லிஸ்ட் சமூகவலைதளத்தில் வெளியாகி  வைரலாகி  வருகிறது. தற்பொழுது கமலஹாசன் அவர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் சின்னத்திரை நடிகைகள்  பலரும் இணைந்துள்ளது ரசிகர்களிடையே கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி இணைந்துள்ளது படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது. அதேபோல் இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. தற்பொழுது கமலஹாசன் அவர்கள் பிக்பாஸ் ஷூட்டிங் மற்றும் விக்ரம் சூட்டிங் இரண்டிலும் கலந்து கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இருக்கிறது. இந்த நிலையில் விக்ரம் திரைப்படம் முடிவடைந்த நிலையில் அடுத்ததாக கமல் யாருடன் கூட்டணி வைக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வருகிறது.

அடுத்ததாக கமல் தேசிய விருதுகளை வென்ற வெற்றிமாறன் அவர்களுடன் கூட்டணி வைக்கப் போவதாக தகவல் கிடைத்துள்ளது. வெற்றிமாறன் அவர்கள் சமீபகாலமாக இயக்கும் அனைத்து திரைப்படங்களும் நாவலை அடிப்படையாக கொண்ட  கதையை இயக்கி வருகிறார். அந்த வகையில் கமலஹாசனை வைத்து வெற்றிமாறன் இயக்கும் திரைப்படமும் நாவலை தழுவி எடுக்கப்படும் என சந்தேகத்தில் இருக்கிறார்கள்.

இந்த தகவலை அறிந்த கமலஹாசன் ரசிகர்கள் மிகவும் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள். அடுத்து ஒரு விருது கன்ஃபார்ம் எனவும் சமூகவலைதளத்தில் கமெண்ட் செய்து வருகிறார்கள்.