விஜய் டிவியிடம் வசமாக சிக்கிய கமலஹாசன்.! விழிபிதுங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளாறே ரசிகர்கள் வேதனை.!

0

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சில ரியாலிட்டி ஷோக்கள் உலகம் முழுவதும் பிரபலம் அடைந்துள்ளது. அந்த வகையில் ஒன்றுதான் பிக்பாஸ். விஜய் டிவி தங்களது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஒவ்வொருவரையும் பார்த்து பார்த்து கண்ணும் கருத்துமாக ஒளிபரப்பாகி வருகிறார்கள்.

அந்த வகையில் கடந்த நான்கு வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி உலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ளது அதோடு தொடர்ந்து ரசிகர்களும் இந்நிகழ்ச்சிக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.சமீபத்தில் தான் இந்நிகழ்ச்சியின் நான்காவது சீசன் நடைபெற்று முடிந்தது.

எனவே இந்நிகழ்ச்சியை குறிப்பிட்ட மாதத்திற்குள் ஒளிபரப்ப வேண்டும் என்பதற்காக கடந்த லாஸ்ட் சீசன் மிகவும் குழப்பி இருந்தார்கள். இது ஒருபுறமிருக்க மற்றொருபுறம் கொரோனாவின் காரணத்தினாலும் கிடைத்த போட்டியாளர்களை வைத்து நிகழ்ச்சியை ஒளிபரப்பினார்கள்.

இந்நிலையில் விரைவில் பிக்பாஸ் சீசன் 5 அறிமுக படுத்துவதற்காக போட்டியாளர்களை தேர்ந்தெடுத்து வருகிறார்கள். இந்த வேலை ஒருபுறம் நடந்து வந்தாலும் கொரோனாவின் மூன்றாவது அலை கண்டிப்பாக இருக்கும் என்று மருத்துவர்கள் கூறி உள்ளார்கள். எனவே தற்பொழுது இந்த நிகழ்ச்சியை ஆரம்பித்தாலும் கொரோனாவின் மூன்றாவது அலை வருவதற்கு முன்பே முடித்தாக வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்கள் விஜய் டிவி.

இப்படிப்பட்ட நிலையில் ஐந்தாவது சீசனை தொகுத்து வழங்குவதற்காக கமலஹாசன் முன்பே அட்வான்ஸாக பணம் வாங்கி விட்டதாகவும் அதனை தனது கட்சிக்காக செலவு செய்து விட்டதாகவும் நிர்வாகி ஓப்பனாக கூறியிருந்தார். இப்படி ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்ட கமலஹாசன் மற்றொரு பக்கம் புதிய படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

kamal bigg boss
kamal bigg boss

எனவே தற்போது தொடர்ந்து கமலஹாசன் திரைப்படங்களில் நடிப்பதற்கான வேலைகளை பார்த்து வருவதால் விஜய் டிவி வருத்தத்தில் இருந்து வருகிறார்களாம். இதன் காரணமாக எப்பொழுது பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கினாலும் அதில் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து வருகிறார்களாம் விஜய் டிவி.