விருமாண்டி பட நடிகை தற்பொழுது எப்படி இருக்கிறார் தெரியுமா.? இதோ அவர் கணவருடன் இருக்கும் புகைப்படம்

கடந்த 2001 ஆம் ஆண்டு நடிகர் அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த வானவில் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு காலடி எடுத்து வைத்த நடிகைதான் அபிராமி இதனைத் தொடர்ந்து இவர் கன்னடம்,தெலுங்கு,மலையாளம் போன்ற பல மொழித் திரைப்படங்களில் நடித்து பல கோடி ரசிகர்கள் வட்டத்தை சேர்த்து வைத்திருக்கிறார்.

மேலும் இவர் தமிழில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விருமாண்டி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து மிகவும் புகழ் பெற்றார்.கடந்த 2004 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்து இருந்தது என்று தான் கூற வேண்டும்.

மேலும் இந்த திரைப்படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து மிகவும் நெருக்கமாக நடித்து இருப்பார் இந்த திரைப்படம் வெளியானபோது இவர் மீது பல சர்ச்சைகள் இருந்தாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அடுத்தடுத்த திரைப்படங்களைப் கைப்பற்றி தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

மேலும் அதன் பின்பு சரியான பட வாய்ப்பு எதுவும் இல்லாத நிலையில் ஆசியா சேனலில் தொகுப்பாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது இவரது திருமண வாழ்க்கையில் கடந்த 2009 ஆம் ஆண்டு மலையாள எழுத்தாளர் பவானியின் பேரனான ராகுல் பகவான் என்பவரை திருமணம் செய்துகொண்டு கேரளாவில் தற்போது தனது கணவருடன் ஜாலியாக வாழ்ந்து வருகிறார் திருமணத்திற்கு பிறகு பல நடிகைகளைப் போலவே இவரும் ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே நடித்து வந்தார்.

abirami
abirami

அந்த வகையில் பார்த்தால் இவர் கடைசியாக 36 வயதினிலே என்ற திரைப்படத்தில் மட்டும் தமிழில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது இந்நிலையில் இவர் தனது கணவருடன் இருக்கும் புகைப்படம் ஒன்று பதிவு செய்துள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இவருக்கு ஏற்ற கணவர் தான் இவருக்கு அமைந்திருக்கிறார் என்று ரசிகர்கள் கமென்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment