கமல், லோகேஷ் கூட்டணியில் இருந்து விலகிய விஜய்சேதுபதி.! இது தான் காரணமா.? ஷாக்காக்கும் ரசிகர்கள்.

0

நடிகர் கமல் சட்டமன்ற தேர்தலில் வேட்பாளராக நின்று  தோற்று இருந்தாலும் அவருக்கான ஆதரவு மடங்கு அதிகரித்துள்ளது இதனால் வருகின்ற தேர்தல்களில் அவர் நிச்சயம் வெற்றி பெறுவார் என பலரும் கூறுகின்றனர் இது இப்படி இருக்க நடிகர் கமல் தற்போது படங்களில் நடிக்க அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்.

இவர் நடித்த இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு இதுவரை 80% முடிவடைந்தாலும் மீதி 20% எடுக்கப்படாமல் பல மாதங்களாக இழுக்க பட்டுவந்தால் நடிகர் கமல் அடுத்தடுத்த சிறப்பான இயக்குனர்களை தேர்வு செய்து கதைகளை கேட்டு நடிக்க அதிகம் ஆர்வம் காட்டியுள்ளார் அந்த வகையில் மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷை அழைத்து ஒரு கதையை கேட்டார் அந்த கதைக பிடித்துப்போக உடனடியாக அந்த படப்பிடிப்பு வேலைகளை முன்புறமாக தொடங்கியுள்ளது.

கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் பிலிம் நிறுவனம் தயாரிக்கிறது இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார் இப்படியிருக்க இந்த படத்தில் பல வில்லன்கள் நடிக்க உள்ளதாக ஆரம்ப படத்தில் இருந்து கூறி வந்தனர்.

மேலும் இந்த படத்தில் விஜய்சேதுபதியும் பகத் பாசில் அர்ஜுன் தாஸ் போன்ற பலர் நடிக்கின்றனர் என கூறப்பட்டு வந்த நிலையில் திடீரென விஜய் சேதுபதி இந்த படத்தில் இருந்து பின்வாங்குவதாக தற்போது செய்திகள் வெளிவந்துள்ளன காரணம் சமீப காலமாக வில்லன் ரோலில் பின்னி பெடலெடுக்கும் விஜய்சேதுபதிக்கு மார்க்கெட் அனைத்து மொழிகளிலும் எதிரி உள்ளது இதனால் தனது சம்பளத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளார்.

இப்படி இருக்க கமலஹாசனின் விக்ரம் படத்திற்காகவும் விஜய் சேதுபதி மிகப் பெரிய ஒரு தொகையை கேட்டுள்ளார் அதற்கு ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் கொடுக்க மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது இதனால் நடிகர் விஜய் சேதுபதி இந்த படத்தில் இருந்து விலகிக் கொண்டதாக கோலிவுட் வட்டாரத்தில் இருந்து தகவல்கள் கசிகின்றன.

இதை அதிகாரப்பூர்வமாக சொல்ல கொள்ளவில்லை என்றாலும் விஜய் சேதுபதி மற்றும் கமலஹாசனின் கூட்டணி மிகப் பெரிய அளவில் ஒரு கூட்டம் எதிர்பார்த்தது அதற்கு முட்டுக்கட்டை போடும் விதமாக இந்த செய்தி வெளிவந்துள்ளது மேலும் இச்செய்தி பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.