தளபதி 67-ல் லோகேஷ்க்காக கமல் செய்யப் போகும் தரமான சம்பவம்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய் இவர் தற்போது லோகேஷ் கனகராஜ். இவர் தற்போது தளபதி 67 திரைப்படத்தை இயக்கி வருகிறார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கொடைக்கானலில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து தளபதி 67 திரைப்படத்தில் வெளியாகும் என்று ஏற்கனவே இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியிருக்கிறார் ஆனால் இதுவரைக்கும் எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை இதனால் கடுப்பில் இருக்கும் ரசிகர்களுக்கு அவ்வப்போது தளபதி 67 திரைப்படத்திலிருந்து தகவல்கள் லீக் ஆகுவதால் ரசிகர்கள் கொஞ்சம் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

அந்த வகையில் தளபதி 67 திரைப்படத்தில் விஜய் ஒரு 50 வயது கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது மேலும் இந்த தம்பதியினருக்கு மகளாக பிக் பாஸ் பிரபலம் ஜனனி நடிக்கிறார் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரம் அவர்கள் நடிக்க இருப்பதாக தற்போது ஒரு புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. தளபதி 67 திரைப்படத்தில் நடிகர் விக்ரம் அவர்கள் நடிக்க 30 நாட்கள் கால்ஷிட் ஒதுக்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. தளபதி 67 திரைப்படம் lcu-வுக்கு கீழ் உருவாகுவதால் மிகப் பெரிய எதிர்பார்ப்பில் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

ஏற்கனவே கைதி மற்றும் விக்ரம் ஆகிய இரண்டு திரைப்படங்களும் lcu-வில் இணைந்து உள்ள நிலையில் தற்போது தளபதி 67 திரைப்படத்துடன் கைதி மற்றும் விக்ரம் திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு அதிகம் இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

அந்த வகையில் சமீபத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பகத் பாசில் தளபதி 67 திரைப்படம் lcu-வில் இணைகிறது ஆகையால் அந்த படத்தில் நடிக்க நிறைய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து நடிகர் சூர்யாவிற்கு இந்த திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் விக்ரம் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 67 திரைப்படத்தின் மேலும் ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது அதாவது தளபதி 67 திரைப்படத்தில் நடிகர் கமல் அவர்கள் கேமியோ ரோலில் நடிக்க இருக்கிறார் என்று தற்போது ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. ஆகையால் விக்ரம் திரைப்படத்தின் சம்பவத்தை இதிலும் செய்வார் என்றும் கூறப்படுகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment