கமல் ,ரஜினியை தொடர்ந்து அஜித்தை பெரிதும் நம்பி இருக்கும் பிரபல நடிகர்.! காரணம் இது தான்.

0

தமிழ் சினிமாவில் வில்லன் என்றாலே நம் நினைவுக்கு வருபவர் பொன்னம்பலம் என்கின்ற கபாலி. இவர் தமிழ் சினிமாவில் ஹீரோவுக்கு ஈடு இணையாக தனது  சிறப்பான கதாபாத்திரத்தை வெளிப்படுத்தி படத்தை வெற்றிக்கு உறுதுணையாக இருப்பார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே அது போல தமிழ் சினிமா உலகில் பல படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மிகச் சிறந்த வில்லன் என்ற பெயரை பெற்றார்.

இவர் தற்பொழுது நகைச்சுவை கலந்த வில்லனாக தற்போது நடித்து வருகிறார். மேலும்  குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸில் பங்குபெற்று ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் இப்படி வலம் வந்து கொண்டிருந்த இவர் சமிபத்தில் பொன்னம்பலம் சிறுநீரக கோளாறு காரணமாக அடையாற்றில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனை அறிந்த கமல்ஹாசன் அவர்கள் அவருக்கு உதவி செய்தார். தினமும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்து வந்தார். மேலும் பொன்னம்பலத்தின் இரண்டு குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்றுயுள்ளார் கமலை தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கும் ரஜினி அவர்களும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செலவை ஏற்றுக்கொண்டார் இந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ள பொன்னம்பலம் அவர்கள் பேட்டி கொடுத்துள்ளார்.

ponnambalam
ponnambalam

எனக்கு உடல்நிலை சரியில்லை முதலில் சரத்குமார் இடம் சிகிச்சை செய்வதற்காக 50000 பண உதவி செய்தார் தற்பொழுது மிகுந்த வறுமையில் இருக்கிறேன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கும் சத்யராஜ் ,விஜயகாந்த், போன்றவர்கள்  உதவி வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். அதிலும் குறிப்பாக அஜித்தை  நான் பெரிதும் நம்பி இருக்கிறேன் என கூறினார்.

மேலும் ஸ்டண்ட் யூனியனில் இருந்து தனக்கு வரவேண்டிய பணம் வந்தால் போதும் ஆனால் பணம் இதுவரை வராமல் இருந்து வருகிறது அது வந்தால் கூட போதும் என கூறினார்.