கமல் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தின் கதை லீக்.! அரசியலைப் புரட்டிப் போடுமா.?

0
indian 2
indian 2

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் திரைப்படம் என்றாலே ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு இருக்கும், அந்தவகையில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன்2, இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன் காஜல் அகர்வால் நடித்து வருகிறார்.

இவர்களுடன் இணைந்து சித்தார்த், விவேக், ப்ரியா பவானி சங்கர், ராகுல் ப்ரீத் சிங் என பலர் நடித்து வருகிறார்கள், லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் தான் இசையமைத்து வருகிறார், இந்தியன் 2 திரைப்படம் நீண்ட நாட்களாக தொடங்காமல் இழுவையில் இருந்தது.

தற்போது தான் தொடங்கி படப்பிடிப்பு நடந்து வருகிறது, இந்த நிலையில் படத்தின் கதை லீக்காகி விட்டதாக செய்திகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வருகின்றன. அந்தக் கதையானது. நடிகர் சித்தார்த் யூடியூப் நடந்தும் சமூக ஆர்வலராக இருப்பார் நாட்டில் நடக்கும் ஊழலுக்கு எதிராக பல குரல்கள் எழுப்பி வருகிறார் அதனால் அவருக்கு பகிரங்கமாக மிரட்டல் வருகிறது..

இதையறிந்த வயதான கமலஹாசன் வெளிநாட்டில் இருந்து உடனடியாக சென்னை திரும்புகிறார், ஊழல் செய்யும் அரசியல்வாதிகளை தனது பாணியில் தீர்த்து கட்ட முடிவு செய்கிறார், அதனால் சென்னை வந்ததும் தனது மனைவி நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி விட்டு ஊழல் அரசியல்வாதிகளின் பட்டியலை சித்தார்த்திடம் வாங்கிக் கொள்கிறார்,.

பின்னர் யாருக்கும் தெரியாமல் தனது வர்ம கலை மூலம் ஒவ்வொருவராக அழித்து விடுகிறார், இவருக்கு நடிகர் சித்தார்த் மற்றும் வர்மக்கலை பற்றிய ஆராய்ச்சி செய்யும் காஜல் உதவி செய்கிறார். கமல் தான் இதை அனைத்தையும் செய்கிறார் என்று போலீஸ் கண்டுபிடித்து விடுகிறது. அதனால் கமல்ஹாசனை பிடிப்பதற்கு புதிய திட்டம் தீட்டுகிறார்கள் போலீஸ்காரர்கள் அதன் பிறகு கமல்ஹாசன் பிடிபட்டாரா இல்லையா என்பதுதான் கிளைமாக்ஸ்.

இந்த கதை சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருவதால் இதைப்பற்றிய படக்குழு எந்த ஒரு பதிலும் அளிக்காமல் மவுனம் காத்து வருகிறது.