ஊர்கூடி கட்டி காத்ததை காற்றில் விடுவது நியாயமா? என்ற கமலின் கேள்விக்கு குவியும் ஆதரவு.

kamalhasan tweet to tamilnadu government: தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரும், மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அவர்கள் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட கருத்து ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

கொரோனா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளார்கள். இந்நிலையில் தங்களின் வாழ்வாதாரத்தை இழுந்து தவித்து வரும் மக்களை காக்க தன்னுடைய கட்சியின் சார்பில் பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

பசி பட்டினியால் உணவின்றி தவித்து வரும் மக்களை கண்டறிந்து அவர்களுக்கு உதவி செய்து வருகிறார்.மேலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டுவரும் நிலையில் அதற்கிடையே நேற்று  டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது. இதற்கு எதிர் கட்சிகள் மட்டுமின்றி, சமூக ஆர்வலர்கள், மாணவர்கள் மற்றும் மக்களிடையேயும் பல்வேறு எதிர்ப்புகள் வந்த வண்ணமே உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.

கமல்ஹாசன் தனது ட்விட் ஒன்றில் மருத்துவர்கள், காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் என அனைவரும் தன் உயிரை பணயம் வைத்து போராடிக் கொண்டிருக்கின்றனர். நடுத்தர மக்கள் வீட்டில் கட்டுண்டு இருக்கின்றனர். ஏழைகள் வாழ வழியின்றி தவிக்கின்றனர். தற்போது டாஸ்மாக் திறந்து விட்டு ஊர்கூடி கட்டிக்காத்ததை காற்றில் விடுவது நியாயமா? என கேள்வி எழுப்பி உள்ளார். இந்த கேள்விக்கு மக்களின் ஆதரவு குவிந்த வண்ணமே உள்ளது. தற்போது இந்த ட்விட் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Comment