விஜய் டிவி பிக்பாஸில் களமிறங்கும் 2 பிரபல இளம் நடிகர்கள்.!! இவர்கள் நடித்த திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்.

0

biggboss season 4 2 young actors: பிக் பாஸ் என்று கூறியதிலிருருந்தே பெரும் குழப்பத்தில் இருந்து வருகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக பிக் பாஸ் சீசன் 4ல் 16 போட்டியாளர்களா அல்லது 12 போட்டியாளர்களா என இன்னும் குழப்பத்தில் உள்ளனர். அதுமட்டுமல்லாமல் 100 நாட்களா அல்லது என்பது நாட்கள் என்ற சந்தேகமும் இன்னும் ரசிகர்களிடையே போய்க் கொண்டுதான் இருக்கிறது.

மேலும் நிகழ்ச்சியின் தொகுப்பாளரான நடிகர் கமலஹாசன் அவர்கள் பிக் பாஸ் சீசன் 4 க்கு இரண்டு இளம் ஹீரோக்களை சிபாரிசு செய்து உள்ளதாக பேசப்பட்டு வருகிறது. இந்த 2 இளம் நடிகரின் தந்தையும் கமலஹாசனின் மிக நெருங்கிய நண்பர் என்பது தெரியவருகிறது.

96 திரைப்படத்தில் நடித்த ஹீரோவான விஜய் சேதுபதி என நினைத்துவிடாதீர்கள். இளம் வயது விஜய் சேதுபதியாக நடித்த பிரபல காமெடி நடிகர் எம்எஸ் பாஸ்கரின் மகனான ஆதித்யா பாஸ்கர் பங்குபெற போவதாக செய்தி வெளியாகி வருகிறது.

அதுமட்டுமல்லாமல் பிரபல முன்னணி நடிகரான நாசரின் மகன் அபிஹாசனிடம் பிக்பாஸில் கலந்து கொள்ள பேச்சுவார்த்தை நடைபெறுவதாக அறியப்படுகிறது. இவர் கடாரம் கொண்டான் திரைப்படத்தில் அக்ஷரா ஹாசனுக்கு காதலனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வருடம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் எந்த ஒரு நடிகரும் கலந்து கொள்ளாததால் இவர்கள் இருவரின் பெயரையும் கமல் அவர்களே சிபாரிசு செய்துள்ளதாக பேசப்பட்டிருக்கிறது.  ஆனால் ஒன்று மட்டும் உறுதி இவர்கள் இருவருமே போட்டியாளர்களுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு திறமை கொண்டவர்கள். மேலும் இவர்கள் இருவரில் யார் வேண்டுமானாலும் பரிசு பெறுவார் எனவும் கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் இவர்கள் 2 பேரும் வருவார்களா அல்லது ஒருவர் மட்டும் வருவாரா என்ற குழப்பம் இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறது எனவும் கூறுகின்றனர். மேலும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் யார் வருவார்கள் யார் வரமாட்டார்கள் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.