கமலஹாசனின் விக்ரம் திரைப்படம் உலக அளவில் அள்ளிய முதல் நாள் வசூல் – மிரண்டுபோன தமிழ் சினிமா..

நடிப்பிற்கு பெயர் போன உலகநாயகன் கமலஹாசன் நான்கு வருடங்களுக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் சொன்ன ஆக்சன் கதை பிடித்துப் போகவே உடனடியாக படமாக எடுக்கப்பட்டது இந்த படத்தை மிக பிரமாண்ட பொருட்செலவில் உலக நாயகன் கமலஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் நிறுவனம் தயாரித்திருந்தது.

இந்த படத்தில் கமலுடன் சேர்ந்து நடிப்பில் பின்னி பெடலெடுக்கும் விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா போன்றவர்கள் இணைந்து நடித்துள்ளது இந்த படத்திற்கான எதிர்பார்ப்பை ஆரம்பத்திலேயே அதிகரிக்க செய்தது. படம் ரசிகர்கள் எதிர்பார்த்தது போல நேற்று கோலாகலமாக உலக அளவில் ரிலீஸ் ஆனது.

படம் முழுக்க முழுக்க ஆக்சன் சென்டிமெண்ட் அதிகமாக இருந்ததால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இழுத்தது அதேசமயம் கொஞ்சம் இருந்ததால் மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்று தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது படத்தை பார்க்க வரும் ரசிகர்கள் தொடங்கி சினிமா பிரபலங்கள் வரை நிச்சயமாக விக்ரம் திரைப்படம் 500 கோடி வசூலை அள்ளும் என கூறிவருகின்றனர்.

அந்த அளவிற்கு படம் இருப்பதாக கூறப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் விக்ரம் திரைப்படம் முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது உலக அளவில் விக்ரம் திரைப்படம் முதல் நாளில் மட்டும் சுமார் 66 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்தடுத்த நாட்களிலும் நல்ல வரவேற்பு இருக்கும் என்பதால் படம் எதிர்பார்க்காத வசூலை அள்ளும் என கூறப்படுகிறது. இளம் தமிழ் சினிமா பயணத்தில் இது ஒரு திருப்புமுனை படம் தான் எனவும் கூறி வருகின்றனர்.

Leave a Comment