உலக நாயகன் கமலஹாசன் திரை உலகில் போடாத கெட்டப்பே கிடையாது நடிக்காத கதாபாத்திரமே கிடையாது அந்த அளவிற்கு நடித்து பேரையும் புகழையும் சம்பாதித்திருக்கிறார் இப்பொழுதும் சினிமா இவரை விடாமல் துரத்துகிறது. கமலும் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அப்படி இவர் நடிப்பில் கடைசியாக வெளியான விக்ரம் திரைப்படம்..
மிகப்பெரிய ஒரு ஆக்சன் பேக் திரைப்படம் ஆக இருந்தது. மக்களுக்கு ரொம்ப பிடித்த போனதால் நல்ல விமர்சனத்தை பெற்று அனைத்து இடங்களிலும் அதிரிபுதிரியான வசூல் அள்ளியது. கடைசியாக ஒட்டுமொத்தமாக 400 கோடிக்கு மேல் வசூல் அள்ளி புதிய சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கருடன், நடிகர் கமல் கூட்டணி அமைத்து இந்தியன் 2..
திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் வயதான கெட்டபில் நடிக்கிறார் இந்த படத்தில் நடிக்க கெட்டப் போடவே பல மணி நேரங்கள் ஆகும் என சொல்லப்படுகிறது ரொம்பவும் மெனக்கெட்டு இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார் இந்த படம் பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது சினிமா உலகில் வெற்றி நாயகனாக ஓடினாலும்..
மறுபக்கம் சின்னத்திரை அரசியல் போன்றவற்றிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார் இதனால் கமலின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கிறது. இந்த நிலையில் உலக நாயகன் கமலஹாசன் சேர்த்து வைத்திருக்கும் சொத்து மதிப்பு குறித்து ஒரு தகவல் வெளியாகி உள்ளது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..
மொத்த சொத்து மதிப்பு சுமார் 177 கோடி என சொல்லப்படுகிறது. கமலுக்கு சென்னையில் பெரிய வீடு இருக்கிறது அதன் மதிப்பு மட்டுமே சுமார் 19 கோடி என சொல்லப்படுகிறது. பிஎம்டபிள்யூ 730 Ld, டீலக்ஸ் lenus lx 570 போன்ற இரண்டு சொகுசு கார்களை உலக நாயகன் கமலஹாசன் வைத்திருக்கிறார் இதன் மதிப்பு மட்டுமே 3.69 கோடி என சொல்லப்படுகிறது.
