காட்டுத் தனமாக இளம் வயதில் இருந்த கமல்ஹாசன்.! இணையத்தில் அதிரடி காட்டும் ஜிம் வொர்க் அவுட் இளமை புகைப்படங்கள்.!

உலக நாயகன் என்ற பட்டத்தோடு தமிழ் சினிமாவில் கெத்தாக வலம் வரும் நடிகர் தான் கமல்ஹாசன் இவரது நடிப்பில் இறுதியாக வெளியான விக்ரம் திரைப்படம் பல கோடி வரை வசூல் செய்து விட்டது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

மட்டுமல்லாமல் பல ரசிகர்களும் பார்ப்பதற்கு ஒரு ஹாலிவுட் படம் போல் இருக்கிறது என்று விமர்சனங்கள் கொடுத்து வந்தார்கள்.அதனை தொடர்ந்து பார்த்தால் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் தற்பொழுது மிகவும் அற்புதமாக நடித்து வருகிறார். மேலும் இந்த இந்தியன் 2 திரைப்படம் எப்பொழுது வெளியாகும் என பல ரசிகர்களும் பலவிதமான கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

பல வருடங்களுக்குப் பிறகு இந்த இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருவதால் பல ரசிகர்களும் உற்சாகத்தில் தான் இருக்கிறார்கள்.இந்த திரைப்படத்தை தொடர்ந்து பார்த்தால் கமல்ஹாசன் நிறைய திரைப்படங்களில் கமிட் ஆகி நடிக்க இருப்பதாகவும் அடிக்கடி தகவல் இணையத்தில் வெளிவந்து கொண்டிருக்கிறது ஆனால் அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் எதுவும் வரவில்லை என்று தான் கூற வேண்டும்.

பொதுவாகவே கமல்ஹாசன் தனது உடல் நிலையை பராமரித்துக் கொள்வதற்கான இயற்கை வழிகளை நாள்தோறும் செய்து கொண்டே இருப்பார்.இப்பொழுது தான் இப்படி இருக்கிறார் என்று பார்த்தால் தற்பொழுது இவரது சில புகைப்படங்கள் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது ஆம் இளம் வயதில் ஜிம் ஒர்க் அவுட் செய்யும் புகைப்படங்கள் போல் தெரிகிறது.

kamal
kamal

அதிலும் குறிப்பாக பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பதால் பல ரசிகர்களும் இவரது புகைப்படங்களை இணையத்தில் ஷேர் செய்து வருவது மட்டுமல்லாமல் கமல்ஹாசன் இளம் வயதில் எப்படி இருக்கிறார் பாத்தீங்களா எங்க கண்ணே பட்டிடுடும் போலயே என்றும் கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

kamal
kamal

Leave a Comment