பிறந்தநாளை முன்னிட்டு குழந்தையாக மாறிய உலக நாயகன் கமலஹாசன் – இணையதளத்தை கலக்கும் வீடியோ..!

உலக நாயகன் கமலஹாசன் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோவாக இருக்கிறார் இவர் எந்த மாதிரியான கதாபாத்திரம் கொடுத்தாலும் தயங்காமல் அந்த கதாபாத்திரமாகவே மாறி நடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார் இதனாலேயே  இவரை செல்லமாக நடிப்பிற்கு பெயர் போன உலகநாயகன் கமலஹாசன் என அனைவரும் கூப்பிடுகின்றனர்.

இவர் இதுவரை 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து உள்ளார். இப்போதும் பல படங்களில் நடித்து உள்ளார். இவர் கடைசியாக விக்ரம் படத்தில் நடித்தார். இந்த படம் 410 கோடிக்கு மேல் வசூல் செய்து புதிய சாதனை படைத்தது அதனை தொடர்ந்து அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுக்க முனைப்பு காட்டி வருகிறார்.

அதில் முதலாவதாக ஷங்கருடன் இணைந்து இந்தியன் 2 திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் கமல்.. அதன் பிறகு சபாஷ் நாயுடு, தேவர்மகன் 2, வேட்டையாடு விளையாடு 2 போன்ற படங்களிலும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது இது இப்படி இருக்க மறுபக்கம் உலகநாயகன் கமலஹாசன்..

விஜய் டிவி தொலைக்காட்சியில் சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 6- ரையும் தொகுத்து வழங்கி நல்ல காசு பார்த்து வருகிறார். இப்படி ஓடிக்கொண்டிருக்கும் உலக நாயகன் கமலஹாசனுக்கு நாளை பிறந்தநாள் ஆனால் அதற்கு முன்பாகவே பிரீ பர்த்டே கொண்டாடியுள்ளார் அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

அதிலும் குறிப்பாக உலகநாயகன் கமலஹாசன் பலூனை தூக்கிப்போட்டு குழந்தை விளையாடுவது போது போல இவரும் விளையாண்டு உள்ளார். அதன் புகைப்படம் இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பிறந்தநாள் அதுவுமாய் நீங்கள் குழந்தை போலவே மாறிவிட்டீர்கள் சூப்பர்  எனக் கூறி கமெண்ட்  அடித்து வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய வீடியோவை..

Leave a Comment