உலக நாயகன்னா கமலஹாசன்.. “உலகநாயகி” இந்த நடிகை தான் – அனைத்து டாப் ஹீரோகளுடன் நடித்து அசால்ட் பண்ணியவர்.!

சினிமா உலகில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தும் நடிகர் நடிகைகளுக்கு நாம்எப்போது ஒரு புனைபெயரை வைத்து அழைப்பது வழக்கம்.. அந்த வகையில் திரை உலகில் 40 வருடங்களுக்கு மேலாக நடித்து ஓடி கொண்டிருப்பவர் உலக நாயகன் கமலஹாசன் இவர் படத்தின் கதைக்கு ஏற்றவாறு தனது உடல் எடையை ஏற்றியும், குறைத்தும் அந்த கதாபாத்திரமாகவே மாறி நடிப்பது அவரது ஸ்டைல்..

அதனால  என்னவோ ரசிகர்கள் கமலை செல்லமாக உலகநாயகன் கமலஹாசன் என அழைப்பது வழக்கம். உலக நாயகன் கமலஹாசன் தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி கன்னடம் என அனைத்து இடங்களிலும் பிரபலம் பெற்றவர் இவர் முதலில் குழந்தை நட்சத்திரமாக தனது பயணத்தை ஆரம்பித்து இருந்தாலும்..

ஹீரோவாக பல்வேறு விதமான கெட்டப்புகளை போட்டு தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்து இருப்பார் மேலும் சினிமாவில் புதிய புதிய தொழில்நுட்பகளை கொண்டு வந்ததும் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் நடிப்பில் கடைசியாக வெளியான விக்ரம் திரைப்படம் கூட சுமார் 400 கோடிக்கு மேல் அள்ளி ஒரு புதிய சாதனை படைத்தது.

இவருக்கு ஈடு இணையாக 70 காலகட்டங்களில் நடிப்பில் பின்னி படலெடுத்தவர் உலகநாயகி சாவித்திரி. இவருடைய நடிப்பு மிகவும் நேர்த்தியாகவும் பிசிறு தட்டாமல் இருப்பதால் அப்பொழுது சினிமா உலகில் பிரபலமான நடிகையாக இவர் பார்க்கப்பட்டார். சாவித்திரி கமலை போலவே பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமடைந்தவர்.

சாவிதிரி  பெரும்பாலும் டாப் நடிகரின் படங்களில் தான் நடித்திருப்பார் அதிலும் குறிப்பாக எம்ஜிஆர், சிவாஜி கணேசன், எஸ் எஸ் ஆர் போன்ற டாப் ஹீரோக்களுடன் நடித்தவர் தமிழை தாண்டி தெலுங்கிலும் டாப் நடிகையாக வலம் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது அனைத்து மொழிகளிலும் தனது திறமையை காட்டி உலகநாயகி என நிரூபித்தவர். கமல் இப்பொழுது என்றால் அதற்கு முன்பாக நடிகை சாவிதிரி தனது திறமையின் மூலம் ரசிகர்களை கட்டி இழுத்து உலகநாயகியாக வலம் வந்தவர்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment