ஹாலிவுட் ஹீரோவாக மாறி பார்பி கெட்டப்பில் கலக்கும் கமல்ஹாசன்.. இணையதளத்தை கலக்கும் புகைப்படங்கள்..

Kamal Hassan: நடிகர் கமலஹாசன் பார்பி கெட்டப்பில் இருக்கும் அட்டகாசமான புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதாவது, ஹாலிவுட் படமான ஓபன்ஹெய்மர், பார்பி ஆகிய இரண்டு திரைப்படங்களும் கடந்த மாதம் 21ஆம் தேதி அன்று வெளியானது இந்த இரண்டு படங்களுக்கும் உலகளவில் நல்ல வரவேற்ப்பை நடைபெற்றது.

அந்த வகையில் முக்கியமாக பார்பி திரைப்படம் 17 நாட்களில் ஒரு பில்லியன்  டாலரை வசூல் செய்து சாதனை படைத்தது. இந்நிலையில் இந்த படத்தில் ஹீரோவாக ரியான் கோஸ்லிங் நடித்திருந்த நிலையில் தற்போது அவருடைய கெட்டத்தில் உலகநாயகன் போஸ்டர் வெளியாகி சோசியல் மீடியாவை தெறிக்க விட்டு வருகிறது.

இவ்வாறு தற்பொழுது நடிகர் கமலஹாசன் அவர்கள் பார்பி நாயகனாக மாறியிருக்கும் நிலையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்துள்ளது. நடிகர் கமலஹாசன் சங்கர் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

KAMAL HASSAN
KAMAL HASSAN

இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சோசியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருந்து வரும் கமலஹாசனின் ஏராளமான புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில் தற்போது பார்பி படத்தின் டைட்டிலுடன் சமூக வலைதளத்தில் கமலின் பின் நிற போஸ்டர் வெளியாகி உள்ளது.

பொதுவாக கமல்ஹாசன் எந்த கெட்டப் கொடுத்தாலும் போட்டு நடிக்க கூடிய திறமை வாய்ந்தவர். ஆனால் பெண் வேடத்திலிருந்து ஏராளமான கெட்டப்  போட்டுள்ளார். முதன் முறையாக அனைவரும் விரும்பும் பார்பி கெட்டப் சோசியல் மீடியாவில் வைரலாக ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படங்கள்.

Leave a Comment