பிரஸ் மீட்டில் விக்ரமை அலறவிட்ட கமல்ஹாசன்.! வைரலாகும் புகைப்படங்கள்.!

வெள்ளித்திரையில் உள்ள பல பிரபலங்களும் சேர்ந்து நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வசூல் தற்பொழுது வரை பல கோடியை தாண்டி வருகிறது இயக்குனர் மணிரத்னம் அவர்கள் படைப்பில் வெளியான இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு தந்தார்கள்.

குறிப்பாக கூற வேண்டும் என்றால் இந்த திரைப்படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும் மக்களுக்கு மிகவும் பிடித்துள்ளது.மேலும் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் கேட்டு வந்த கேள்விக்கு பல சினிமா பிரபலங்களும் அடுத்த வருடம் கோடையில் வெளியாக வாய்ப்பு இருக்கிறது என்று கூறினார்கள்.

அது மட்டுமல்லாமல் நேற்று கமல் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை விக்ரம்,கார்த்தி போன்ற ஒரு சில முக்கிய பிரபலங்களுடன் திரையரங்கில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்த்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.

அதனைத் தொடர்ந்து படத்தைப் பார்த்துவிட்டு பிரஸ் மீட்டில் படத்தைப் பற்றி கேட்ட கேள்விகளுக்கு கமல் பதில் அளித்து வந்தார் அதிலும் குறிப்பாக வெற்றிமாறன் சோழ மன்னரை பற்றி பேசி உள்ளதை கேள்வி எழுப்பினர் இந்த கேள்விக்கு பதில் அளித்துள்ள கமலின் பதில்தான் தற்பொழுது வரை பேசப்பட்டு வருகிறது.

இப்படி இருந்து கொண்டிருந்த நிலையில் விக்ரம் பிரஸ் மீட்டில் கமல் இடம் சார் உங்களுக்கு எப்படி இது எல்லாம் தெரியும் என்று கேள்வி எழுப்பி உள்ளார் அதற்கு கமல் omg என பேசியுள்ளார் அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோ புகைப்படங்கள் தான் தற்பொழுது சமூக வலைதள பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படங்களை இணையத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.

Leave a Comment