கமலஹாசனை அடையாளப்படுத்தியதே தோல்வி படங்கள் தான்.. வடசென்னை பட நடிகர் காரசார பேச்சு

kamal : நடிப்பிற்கு பெயர் போன உலகநாயகன் கமலஹாசன் தொடர்ந்து திரை உலகில் வெற்றி படங்களை கொடுத்து ஓடிக்கொண்டிருக்கிறார் கடைசியாக இவர் நடித்த விக்ரம் திரைப்படம் 400 கோடிக்கு மேல் வசூல் அள்ளி வெற்றி கண்டதை தொடர்ந்து கமலஹாசனுக்கு வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கிறது.

முதலில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கருடன் கூட்டணி அமைத்து இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் அதனைத் தொடர்ந்து ப்ராஜெக்ட் கே என்னும்  படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். அந்த படத்திலிருந்து இவருடைய போஸ்டர் வெளிவந்து வைரலானது.

இந்த படங்களை தொடர்ந்து ஹச். வினோத்துடன் ஒரு படம், மணிரத்தினத்துடன் ஒரு படம், லோகேஷ் கனகராஜ் உடன் ஒரு படம் பண்ணவும்  உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அடுத்த இரண்டு, மூன்று வருடங்களுக்கு கமல் பிஸியாக  பார்க்கப்படுகிறார். இடையில் கிடைக்கின்ற நேரங்களில்  அரசியல் மற்றும் சின்னத்திரை தொலைக்காட்சிகளிலும் தலை காட்டுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படிப்பட்ட உலகநாயகன் கமலஹாசனுக்கு அடையாளமே அவருடைய தோல்வி படங்கள் தான் என பிரபல இயக்குனர் அமீர் கூறியுள்ளார் அவர் சொன்னது என்னவென்றால்.. ரஜினி, விஜய்க்கு அடையாளமே அவருடைய வெற்றி படங்கள் தான் ரஜினிக்கு பாட்ஷா என்றால் விஜய்க்கு துப்பாக்கி இப்படி வெற்றி படங்கள் தான் இவர்களுக்கு அடையாளம்.

ஆனால் கமல் அப்படி கிடையாது அவரது தோல்வி  படங்கள் அடையாளம். கமல் நடித்த குணா, ஹேராம், ஆளவந்தான், ராஜபார்வை போன்ற தோல்வி படங்களில் மூலம் தன்னை அடையாளப் படுத்தி கொண்டவர் என கூறினார். இந்த படங்களில் அவருடைய நடிப்பு மிரட்டலாக இருக்கும் என்பதையும் அவர் தெரிவித்து இருந்தார்.

Leave a Comment