மதுக்கடை திறப்பதனால் ஏற்படும் பாதிப்பு குறித்து தமிழக அரசை விமர்சிக்கும் கமலஹாசன்.

Kamal Haasan criticizes the Government of Tamil Nadu on the impact of opening the bar: திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வந்து கொண்டிருப்பவர் உலக நாயகன்  கமல்ஹசன் ஆவார். இவர் இந்திய திரைப்பட நடிகர் மற்றும் திரைப்பட இயக்குனர், திரைக்கதை ஆசிரியர்,  பாடலாசிரியர், பின்னணிப் பாடகர், நடன அமைப்பாளர் என பலவகை உத்திகலை தன் கைவசம் வைத்துள்ளார்.

இவர் முதலில்  1960ஆம் ஆண்டில் வெளிவந்த களத்தூர் கண்ணம்மா என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து பார்த்தால் பசி தீரும், பாதகாணிக்கை, வானம்பாடி, ஆனந்த ஜோதி, மாணவன் உட்பட ஏராளமான படங்களில் நடித்து திரை உலகில் முன்னணியில் இருக்கிறார்.

தமிழ் திரையுலகில் எப்படி  முன்னணியில்  இருக்கிறாரோ அதே போலவே இந்தி, தெலுங்கு, மலையாளம்,  கன்னடம்,  வங்காளம்  போன்ற மொழி திரைப்படங்களிலும் நடித்து கலக்கி வருகிறார்.

தற்பொழுது சீனாவிலிருந்து பரவிவரும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு  பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அனைத்து கடைகள், நிறுவனங்கலும்  மூடப்பதுமாறு உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது . இந்நிலையில் தற்போது அரசு மதுக்கடைகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தற்போது இதனை தொடர்ந்து கமல்ஹாசன் அவர்கள் அரசை நீங்கள் செய்யும் ஒவ்வொரு தவறும் உயிர்களை பலி வாங்கி வருகிறது உங்களுக்கு புரிகிறதா இல்லையா என ஆதங்கத்துடன் கூறியுள்ளார்.

ஏற்கனவே கோயம்பேட்டை காப்பாற்ற முடியாமல் உயிர் பலி எண்ணிக்கையும், தொற்றுகளும்  அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மதுக்கடைகளை திறந்து விட்டாள் இன்னும் தொற்றும் பலிகளும் அதிகரிக்கும் என கூறியுள்ளார்.

 

 

 

 

 

Leave a Comment