பிக்பாஸ் பிரபலத்தை நம்ப வைத்து ஏமாற்றிய கமலஹாசன்.? எதுக்கு இந்த வீண் புகழ் – விலாசும் நெட்டிசன்கள்..!

தமிழில் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி சீசன் சீசன் ஆக ஒளிபரப்பாகி வருகிறது. இது தற்போது வரை ஐந்து சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் ஒவ்வொரு சீசனும் மக்கள் பலருக்கும் ஃபேவரிட் ஆக அமைந்துள்ளனர். இதனை கமலஹாசன் தொடர்ந்து தொகுத்து வழங்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கூடிய விரைவில் பிக் பாஸ் ஆறாவது சீசன் தொடங்க உள்ளது.

அதற்கான போட்டியாளர்களை தேர்வு செய்து வருகின்றனர். இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 3 நாம் பலரும் மறக்க முடியாத ஒரு சீசன். ஏனென்றால் அந்த சீசன் காமெடி கலாட்டா செண்டிமெண்ட் காதல் போன்ற அனைத்தும் கலந்திருந்தது. அதிலும் குறிப்பாக சீசன் 3 யில் கலந்து கொண்ட கவின், முகின், தர்ஷன், லாஸ்லியா, சாண்டி போன்ற ஐந்து போட்டியாளர்களை நாம் மறந்திருக்க மாட்டோம்.

அந்த அளவிற்கு இந்த சீசனில் ஐந்து பேரும் ஒன்றாக சுற்றி வந்தனர் இருந்தும் போட்டி என்று வந்தால் விட்டுக் கொடுக்காமல் விளையாடியும் வந்தனர். இந்த நிலையில் அந்த சீசன் ஒளிபரப்பாகி வரும் போது தர்ஷன் தான் டைட்டில் வின் செய்வார் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் எதிர்பாராத விதமாக பைனல் நிகழ்ச்சிக்கு இரண்டு வாரங்களுக்கு முன் தர்ஷன் வெளியேறிவிட்டார்.

இருந்தாலும் இவரது வெளியேற்றத்தை கமல் முதற்கொண்டு ரசிகர்கள் வரை பலராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பின்பு பிக் பாஸ் 3 யில் முகின் ராவ் டைட்டில் வின் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது பேசிய கமல் தர்ஷன் இடம் என்னுடைய ராஜ்கமல் புரொடக்ஷனில் கண்டிப்பாக உனக்கு ஒரு வாய்ப்பு தருவேன் என கூறினார்.

kamal

இதைக் கேட்ட தர்ஷன் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தனர். ஆனால் இந்த சீசன் முடிந்து சுமார் மூன்று வருடங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் தர்ஷனுக்கு கமல் எந்த வாய்ப்பும் கொடுக்கவில்லை என்பதால் கமல் சொன்ன சொல்லை காப்பாற்றவில்லை, மேடைப் புகழுக்கு தான் அப்படி சொன்னார் என பலரும் விமர்சித்து வருகின்றனர். இருந்தாலும் மறுபக்கம் தர்ஷன் மறுப்பு தெரிவித்திருப்பார் அல்லது வேறு ஏதாவது நடந்திருக்கும் எனவும் கூறி வருகின்றனர்.

Leave a Comment

Exit mobile version