உலகநாயகன் கமல்ஹாசன் பிக் பாஸ் சீசன்- 4 தொகுத்து வழங்க கேட்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? கேட்டால் தலை சுத்தி போய் விடுவீர்கள்.!

திரையுலகில் மாபெரும் நடிகராக தற்பொழுது வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் கமலஹாசன் ஆவார்.இவர் நடிகர்,திரைப்பட தயாரிப்பாளர்,இயக்குனர், பின்னணி பாடகர்,பாடலாசிரியர்,தொலைக்காட்சி தொகுப்பாளர்,நடனமாடுபவர், அரசியல்வாதி எனப் பல துறைகளிலும் பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது அரசியலில் தன் ஆர்வத்தை அதிகமாக காட்டி வருகிறார். இவர் மக்கள் நீதி மையம் என்ற கட்சியின் தலைவர் ஆவார். தனது சினிமா வாழ்க்கையில் குழந்தை நட்சத்திரமாக தொடங்கியவர் மாபெரும் நடிகராக திரை உலகையே கலக்கி வருகிறார்.

இந்த நிலையில் தற்பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார் என்பது நம் அனைவருக்கும் தெரியும். இது வரையிலும் பிக்பாஸ் 3 வருடங்களாக நடைபெற்று வருகிறது. தற்பொழுது நான்காவது சீசன் ஜூன் மாதம் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது இதனையும் கமல்ஹாசன்தான் தொகுக்க உள்ளார்.

kamal
kamal

இந்த நிலையில் பிக் பாஸ் 3 வரை இவருடைய சம்பளம் 15 கோடி ஆகும் தற்பொழுது நான்காவது ஆண்டாக பணிபுரியும் இருக்கு  சம்பளம் 25 கோடியாக உயர்ந்துள்ளது என தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஆனால் பிக் பாஸ் சீசன்4 நடைபெறும் என்பது பேச்சுவார்த்தை மட்டுமே இருந்து வருகிறது இன்னும் அதிகாரபூர்வமான அறிவிப்புகள் வெளிவரவில்லை. தற்போது கொரோனா வைரஸ் உலகை ஆட்டிப்படைத்த வருகின்ற நிலையில் எந்த ஒரு உறுதியான முடிவும் எடுக்க முடியாது.

Leave a Comment