லோகேஷ் கனகராஜை தொடர்ந்து வேறொரு இயக்குனருக்கு பிரம்மாண்ட காரை பரிசாக கொடுத்த கமல்.! யார் அந்த அதிர்ஷ்டசாலி இயக்குனர்.?

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இவர் வெறும் 4 படங்களை இயக்கி இருந்தாலும் தற்போது தமிழ் சினிமாவியே தூக்கி நிறுத்தி இருக்கிறார் அந்த அளவிற்கு நாலு திரைப்படத்தையும் தரமான திரைப்படமாக கொடுத்துள்ளார்.

மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகிய தற்போது லியோ திரைப்படத்தை இயக்கி வருகிறார் ஏற்கனவே இவர் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான விக்ரம் திரைப்படம் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. இதனை கொண்டாடும் விதமாக நடிகர் கமல் அவர்கள் இந்த படத்தில் பணி புரிந்த பலருக்கும் இருசக்கர வாகனம் பரிசாக அளித்துள்ளார் அதேபோல நடிகர் சூர்யாவிற்கு ரோலக்ஸ் வாட்ச்யை பரிசாக அளித்திருந்தார்.

இதனை தொடர்ந்து இந்த படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களூக்கு சொகுசு காரை பரிசாக கொடுத்திருந்தார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று இதனை தொடர்ந்து தற்போது மேலும் ஒரு இயக்குனருக்கு நடிகர் கமல் அவர்கள் பிரம்மாண்ட சொகுசு காரை பரிசளித்துள்ளார் இந்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி செம்ம வைரலாகி வருகிறது.

சதுரங்க வேட்டை என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி தற்போது அஜித்தை வைத்து துணிவு என்ற மிகப்பெரிய அளவில் வெற்றி படத்தை கொடுத்தவர் தான் இயக்குனர் ஹெச் வினோத். இவர் தற்போது நடிகர்கள் கமலிடம் ஒரு கதையை கூறியிருக்கிறார் அந்த கதை பிடித்த உடனே கமலஹாசன் அவர்கள் ஹச் வினோத்திற்கு சொகுசு காரை பரிசாக கொடுத்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.

நடிகர் கமல் அவர்கள் தற்போது சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படம் இந்த வருடம் வெளியாகி விடும் என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அடுத்த திரைப்படத்தின் இயக்குனரை தேர்வு செய்த கமல் அந்த இயக்குனருக்கு சொகுசு காரை பரிசாக கொடுத்தது பெரும் நெகிழ்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது அது மட்டுமல்லாமல் அந்த கதை எந்த அளவிற்கு இருக்கும் என்று ரசிகர்களை எதிர்பார்க்க வைத்திருக்கிறது.

Leave a Comment