இயக்குனர் ஷங்கருக்கு பரிசு கொடுத்த கமல்..! அதன் விலை மட்டுமே இவ்வளவா.? வாயடைத்துப் போன ரசிகர்கள்

நடிப்பிற்கு பெயர் போன உலகநாயகன் கமலஹாசன் தனது திரை பயணத்தில் இதுவரை 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதில் பெரும்பாலான படங்கள் வெற்றி படங்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக இளம் இயக்குனர் லோகேஷ் உடன் கைகோர்த்து கமல் நடித்த விக்ரம் திரைப்படம்.

முழுக்க முழுக்க போதைப்பொருள் ஆக்ஷன் கலந்த ஒரு படமாக இருந்தாலும் கமலின் நடிப்பு வேற லெவலில் பேசப்பட்டதால் இந்த படம் அதிக நாட்கள் ஓடியதோடு மட்டும் அல்லாமல் வசூலிலும் ருத்ரதாண்டவம் ஆடியது ஒட்டு மொத்தமாக விக்ரம் திரைப்படம்  400 கோடிக்கு மேல் அள்ளி வசூல் சாதனை படைத்தது.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் கமல் பிரமாண்ட இயக்குனர் ஷங்கருடன் கைகோர்த்து இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது இந்த சமயத்தில் இந்தியன் 2 படத்தின் ஒரு காட்சியை கமலுக்கு போட்டு காண்பித்தார்கள்..

அதை கமல் பார்த்துவிட்டு மிரண்டு போய்விட்டாராம். அந்த அளவிற்கு சூப்பராக அந்த காட்சியை வந்து இருந்தாம் உடனே  கமல் ஷங்கருக்கு ஒரு வாட்ச்சை பரிசாக கொடுத்துள்ளார் அதில் ஹைலைட் என்னவென்றால் அந்த வாட்ச்சின் மதிப்பு மட்டுமே சுமார் 15 லட்சம் என கூறப்படுகிறது.

கடைசியாக விக்ரம் படத்தில் சூர்யா நடித்ததற்காக ரோலக்ஸ் வாட்ச் கமல் கொடுத்திருந்த நிலையில் தற்போது ஷங்கருக்கு 15 லட்சம் மதிப்புள்ள வாட்ச்சை கொடுத்து அசத்தி இருக்கிறார் அதன் புகைப்படங்கள் தற்பொழுது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. இதோ கமல் ஷங்கருக்கு வாட்சை கட்டும் அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

Leave a Comment