லியோ டீசரில் இடம்பெறுகிறாரா கமல்.? புதிய அப்டேட்.. உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்

vijay
vijay

தளபதி விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் உருவாகி வரும் நிலையில் இந்த படத்தின் அப்டேட் தொடர்ந்து வெளியாகி வருகிறது. ரசிகர்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்து வரும் நிலையில் லியோ படத்தின் அறிவிப்பை ஒரு வீடியோவின் மூலம் வெளியிட்டு ரசிகர்களை படகுழு உற்சாகப்படுத்தியுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளின் பட்டியல் மற்றும் போட்டோக்கள், வீடியோக்கள் ஆகியவையும் வெளியாகி வருகிறது.

இந்நிலையில் தற்போது தளபதி விஜய்யின் பிறந்தநாள் வர இருக்கும் நிலையில் இதற்காக மிகப்பெரிய அப்டேட் வெளியாகும் என ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்த்து வருகிறார்கள். அப்படி இந்த படத்தை டீசர் வெளியானால் நன்றாக இருக்கும் என கருத்து கூறுகின்றனர். தற்பொழுது லியோ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.

இதில் சுமார் 2000 நடன கலைஞர்களைக் கொண்டு பாடல் காட்சி மிகவும் பிரம்மாண்டமாக உருவாகிறது இதனை அடுத்து சென்னையில் நடைபெறும் ஒட்டு மொத்த படப்பிடிப்பும் ஒரு வாரத்தில் முடியை இருப்பதாக கூறப்படுகிறது. இவ்வாறு படப்பிடிப்புகள் முடிந்தவுடன் லோகேஷ் கனகராஜ் ப்ரோமோஷன் பணிகளை துவங்க உள்ளார். அந்த வகையில் விஜய்யன் பிறந்தநாளை முன்னிட்டு லியோ பட டீசரை வெளியிட்டால் செம ரீச் கிடைக்கும் என டீசரை உருவாக்கும் பணியில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டு வருகிறாராம்.

அப்படி ஜூலை 22ஆம் தேதி விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு கண்டிப்பாக லியோ டீசர் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் டீசரில் மிகப்பெரிய சப்ரைஸ் ஒன்று வைக்கப்பட்டுள்ளது லியோ டீசரில் உலக நாயகன் கமலின் வாய்ஸ் சூப்பர் இடம்பெறுவதாக செய்தி வெளியாகியுள்ளது. ஏற்கனவே லியோ படம் LCU வாக உருவாகி வரும் நிலையில் ஏராளமான பிரபலங்கள் லியோ திரைப்படத்தில் நடித்து வருகின்றனர். எனவே அப்படிதான் உலகநாயகன் கமலஹாசன் அவர்களும் லியோ டீசரில் வாய்ஸ் ஓவர் இடம்பெற்று இருக்கிறது எனவே இதன் காரணமாக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்து வருகிறார்கள்.