தளபதி விஜய் தமிழ் சினிமா உலகில் சமீபகாலமாக ஆக்சன் திரைப்படங்களை கொடுத்து அசத்தி வருகிறார் அந்த வகையில் மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட திரைப்படம் தான் பீஸ்ட். படம் பல்வேறு தடைகளை தாண்டி ஒருவழியாக ஏப்ரல் 13-ம் தேதி கோலாகலமாக வெளியாக இருக்கிறது.
இந்த திரைப்படத்தில் விஜயுடன் இணைந்து பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், செல்வராகவன், ரெடின் கிங்ஸ்லி மற்றும் பல டாப் நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர். இந்த படத்தில் விஜய் ஒரு ராணுவ வீரராக நடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன இந்தப் படம் மிக சிறப்பாக வந்து இருந்தாலும் வசூல் குறைக்க கேஜிஎப் திரைப்படம் வெளியாகிறது.
ஏப்ரல் 13ம் தேதி விஜயின் பீஸ்ட் திரைப்படம் வெளியாகிறது அடுத்த நாளே கன்னட நடிகர் யாஷின் KGF 2 திரைப்படம் வெளியாக இருக்கிறது இதனால் தமிழை தாண்டி மற்ற அனைத்து ஏரியாக்களிலும் விஜய் படத்தின் வசூலை குறைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது இப்படி இருக்க மறுபக்கம் தற்போது விஜய்யின் பீஸ்ட் படத்தின் புதிய போஸ்டரை கழுவி வருகின்றனர் ரசிகர்கள்.
பீஸ்ட் படம் வெளியாக இன்னும் குறைந்த நாட்களே இருப்பதால் அடுத்தடுத்த போட்டோ மற்றும் அப்டேட்டுகள் கொடுத்து அசத்தி வருகிறது அப்படி அண்மையில் விஜய் கோட் சூட்டில் சுத்தியை வைத்துக் கொண்டிருக்கும் போஸ்டர் ஒன்று வெளியாகியது அந்த போஸ்டரை பார்த்து தான் தற்போது ரசிகர்கள் கழுவி உற்றி வருகின்றனர்.
காரணம் பல வருடங்களுக்கு முன்பு கமல் நடிப்பில் உருவான அபூர்வ சகோதரர்கள் படத்தில் கமல் கருப்பு கலர் கோட் சூட்டில் ஒரு போஸ்டரை ரிலீஸ் செய்து இருந்தது அதே போல இப்போது விஜய் இருந்ததால் கமல் ரசிகர்கள் விமர்சிக்கின்றனர். படத்துல தான் காப்பி அடிபிங்கன்னு பார்த்தா போஸ்டரை கூட காப்பி அடிக்கிறார்கள் எனக்கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர் ரசிகர்கள்.