கமல் தயிர் சாதம்..? விஜயகாந்த் கறி விருந்து.? பலபேர் மத்தியில் உண்மையை போட்டுடைத்த தயாரிப்பாளர்.! எதற்க்காக தெரியுமா.?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஒரு காலகட்டத்தில் வளம் வந்தவர் விஜயகாந்த் இவரை அனைவரும் கேப்டன் என்று அன்போடு அழைப்பார்கள் அதற்கு காரணம் இவர் செய்யும் உதவி, மனப்பான்மை, நற்செயல் என அனைத்தையும் சொல்லிக் கொண்டே போகலாம் அந்த அளவு நல்ல உள்ளம் கொண்டவர் ஒரு காலகட்டத்தில் விஜயகாந்த் திரைப்படம் வெளியானால் ஒட்டுமொத்த இளசுகளும் வெறித்தனமாக படத்தை பார்க்க செல்வார்கள்.

அந்த அளவிற்கு விஜயகாந்த் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வந்தது. இவர் 1981 ஆம் ஆண்டு சட்டம் ஒரு இருட்டறை, சிவப்பு மல்லி, நெஞ்சில் துணிவிருந்தால் ஜாதிக்கொரு நீதி, நீதி பிழைத்தது,  பட்டணத்து ராஜாக்கள்,  என பல திரைப்படங்களில் நடித்து வந்தார் இருந்தாலும் விஜயகாந்த் அவர்களுக்கு  வைதேகி காத்திருந்தாள், அம்மன் கோவில் கிழக்காலே, பூந்தோட்ட காவல்காரன், செந்தூரப்பூவே, சின்ன கவுண்டர், கேப்டன் பிரபாகரன் ஆகிய திரைப்படங்கள் விஜயகாந்த் வாழ்க்கையில் மிக முக்கிய திரைப்படமாக அமைந்தது.

இந்த நிலையில் சொல்வதெல்லாம் உண்மை, பூந்தோட்ட காவல்காரன், பாட்டுக்கொரு தலைவன் போன்ற விஜயகாந்த் திரைப்படங்களை தயாரித்தவர் டி சிவா இவர் சமீபத்தில் கூறிய விஷயம் தான் சமூக வலைதளத்தில் மிகப்பெரிய வைரலாகி வருகிறது. டி சிவா சமீபத்தில் பார்ட்டி ,சார்லி சாப்ளின் 2, அக்னி சிறகுகள் ஆகிய திரைப்படங்களை தயாரித்தவர்.

இவர் விஜயகாந்தின் 70  வது பிறந்தநாளை முன்னிட்டு  அவர் பேசியது சமூக வலைதளத்தில் காட்டுத்தை போல் பரவி வருகிறது. விஜயகாந்த் அவர்கள் தன்னுடைய படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் அசைவ விருந்து வைப்பது கேப்டனின் வழக்கம். அப்படிதான் ஒரு திரைப்படத்தின் பொழுது டெக்னீசியன்கள் அனைவருக்கும் விருந்து ஏற்பாடு செய்ய வேண்டும் என எண்ணிக் கொண்டிருந்தார் அப்பொழுது தயாரிப்பாளர் டி சிவா விஜயகாந்த் அவர்களிடம் வந்து சார் இந்தப் படம் ரொம்ப சின்ன பட்ஜெட் தான் என்னால எப்படி தினமும் டெக்னீசியன்களுக்கு அசைவ விருந்து வைக்க முடியும் என தங்களுடைய நிலைமையை கூறினார்.

உடனே கேப்டன் விஜயகாந்த் அவர்கள் என்னுடைய சம்பளத்திலிருந்து 3 லட்சத்தை பிடித்துக் கொண்டு அந்த காசில்  விருந்து வையுங்கள் என கூறிவிட்டாராம். கேப்டன் விஜயகாந்த் திரைப்படத்தில் அசைவ விருந்து என்றாலே அன்லிமிடெட் தான். இதில் என்ன ஒரு சுவாரஸ்யமான தகவல் என்றால் அதே சமயத்தில் கமலஹாசனின் நாயகன் படப்பிடிப்பும் விஜயகாந்தின் உழவன் படப்பிடிப்பும் வேறு வேறு தளங்களில் நடைபெற்றது.

அப்பொழுது கமலஹாசன் நடித்து வந்த நாயகன் படப்பிடிப்பில் கலந்து கொண்ட டெக்னீசியன்களுக்கு தயிர் சாதம் தக்காளி சாதம் ஆகியவை கொடுத்து இருந்தார்களாம் அதே நேரத்தில் விஜயகாந்தின் உழவன் மகன் படப்பிடிப்பில் இலை போட்டு கறி விருந்து நடந்து கொண்டிருந்ததாம் இதனை பிறந்தநாள் விழாவின் பொழுது டி சிவா அவர்கள் அனைவரின் முன்னிலையிலும் கூறி பெருமைப்படுத்தினார்.

அதுமட்டுமில்லாமல் மற்றவர்களின் பசியை போக்குவதில் ஆனந்தம் கொண்டவர் கேப்டன் விஜயகாந்த் என்று அவர் மனதார வாழ்த்தினார்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment