நடிகர் கமலஹாசன் அவர்களின் நடிப்பில் வெளிவந்த பல திரைப்படங்கள் வெளியாகி பல வருடங்களாக இருந்தாலும் தற்போது வரையிலும் மறக்க முடியாத கலைக்களத்தை உடைய திரைப்படமாக இருந்து வரும் படங்கள் பல இருந்து வருகின்றது அந்த வகையில் அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தினை கூறலாம் இப்படிப்பட்ட நிலையில் தற்போது அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தில் மனோரமா நடித்த கதாபாத்திரத்தில் முன்பு காந்திமதி தான் நடித்து வந்தார்.
ஆனால் சென்னை பாஷையை மனோரமா சரளமாக பேசியதால் இந்த திரைப்படத்தின் ஷூட்டிங்கை பாதியிலேயே நிறுத்தி பிறகு கதையை மாற்றியுள்ளார்கள்.அதாவது முதல் வெர்ஷன் பாடலில் காந்திமதி நடித்திருந்த காட்சிகளும் இடம் பெற்றிருந்தது. மேலும் மிகவும் சுவாரசியமாக கனகராஜ் கமலுக்கு அப்பாவாக நடித்து இருந்தார் என்பதுதான்.
இப்படத்தில் என்னத்த ஆடுறா ஒத்துக்கோ ஒத்துக்கோ மற்றும் ராஜா கைய வச்சா போன்ற பாடல்களில் மனோரமாவின் பங்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றது.ஆனால் முதலில் அவர் நடித்திருந்த கதாபாத்திரத்தில் நடிகை காந்தி மதி தான் நடித்திருந்தார் மேலும் ஒரு பாடல் காட்சி எல்லாம் படமாக்கி இருந்தது.

பிறகு மெட்ராஸ் பாஷை பேச வரும் நடிகையை நடிக்க வைத்தால் இந்த திரைப்படம் மிகவும் அருமையாக இருக்கும் என்பதற்காக கமல் காந்திமதி நடித்து வந்த கதாபாத்திரத்தில் மனோரமாவை நடிக்க வைத்தார் .மேலும் இதன் காரணமாக அதற்கு பதிலாக கமல் தேவன் மகன் மற்றும் விருமாண்டி உள்ளிட்ட திரைப்படங்களில் காந்திமதியை நடிக்க வைத்திருந்தார்.

மேலும் இந்த படத்தில் கமலஹாசனின் அப்பாவாக ஜனகராஜ் நடித்திருப்பார் மிகவும் பிரம்மாண்டமாக உருவானது திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் காந்திமதி நடித்த வந்த கதாபாத்திரத்தில் நடித்து வந்த மனோரமா தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.