“படையப்பா” படத்தின் வெற்றிக்கு ஒரு வகையில் ஆண்டவரின் அட்வைஸ்சும் காரணமாம்.? என்னடா சொல்றிங்க..

0
rajini-and-kamal
rajini-and-kamal

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் ரஜினி மற்றும் கமல்ஹாசன். இவர்கள் படங்களின் மூலம் மோதிக் கொண்டாலும் நிஜ வாழ்க்கையில் நல்ல நண்பர்களாக இருந்து வருகின்றனர். இதை பல மேடைகளில் ரஜினியும், கமலும் மாறி மாறி சொல்லி உள்ளனர்.

இருவரும் சினிமா உலகில் தனித்தனி பாதையை அமைத்து கொண்டு தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கின்றனர். கமல் பலவிதமான கெட்டப்புகளை போட்டு நடிப்பது வழக்கம் ஆனால் ரஜினி கமர்சியல் படங்களில் மட்டுமே நடிப்பதை வழக்கமாக வைத்தார். சினிமாவிலும் சரி நிஜ வாழ்க்கையிலும் நல்ல புரிதல் இவர்கள் இருவருக்கும் இருப்பதால் அனுபவித்து வாழ்ந்து வருகின்றனர்.

மேலும் சினிமா உலகில் தான் மற்றும் ஜெயிக்க கூடாது இருவரும் ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் ரஜினிக்கும் உண்டு கமலுக்கும் உண்டு. கமல் படத்தின் சூட்டிங் ஸ்பாட்டிற்க்கு ரஜினி வருவதும் ரஜினி ஷூட்டிங் ஸ்பாட்டிற்க்கு கமல் வந்து போவதும்  காலம் காலமாக நடந்துள்ளது மேலும் படங்களில் ஏதேனும் தவறு இருந்தாலும் அதை சுட்டிக்காட்டி அதை இருவருமே சரி செய்து கொள்வதும் வழக்கம் அப்படித்தான் ஒரு சம்பவம் நடந்தேறி உள்ளது.

கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் படையப்பா முதலில் இந்த படம் சுமார் 3.30 மணி நேரம் ஓடும்படி படம் உருவாக்கப்பட்டது. அதனால் ரஜினி இந்தப் படத்திற்கு இரண்டு இன்டர்வல் பிளாக் வைத்து விடலாம் என கேஎஸ் ரவிக்குமாரிடம் கூறியுள்ளார். மேலும் ஹிந்தியில் இதுபோன்று நடந்திருக்கிறது எனவும் சுட்டிக்காட்டி உள்ளார்.

இதை ஒரு தடவை கமலஹாசனிடம் கூறியுள்ளார் கமலஹாசன் தமிழ் படத்திற்கு இது செட் ஆகாது இதனை இயக்குனரிடமே விட்டுவிடுங்கள் அவர் பார்த்துக் கொள்வார் என கமலஹாசன் அறிவுரை வழங்கி உள்ளார் பின் ரஜினி இயக்குனர் விருப்பம் எனக் கூற படத்தை சூப்பராக கட் செய்து படத்தை ரிலீஸ் செய்தார். படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.